உத்தரப் பிரதேச மாநிலம், முசாஃபர்பூர் பகுதியில் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சுமார் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அதில் 43 குழந்தைகள் பத்து வயதிற்கும் குறைவானவர்கள் என கூறப்படுகிறது.
இந்தக் காய்ச்சல் குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தால், உயிர் பலியை குறைத்திருக்கலாம். ஆனால் அதை செய்ய தவறியதாகக் கூறி உத்தரப் பிரதேச மாநில சுகாதாராத்துறை அமைச்சர் மங்கல் பாண்டே, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆகிய இருவர் மீதும் அம்மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தமன்னா ஹஸ்மி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.