ETV Bharat / bharat

'மகாராஷ்டிரா குறித்து அவதூறு பரப்ப உதவும் சமூக வலைதளங்கள்' - சிவசேனா - சிவசேனா

மும்பை: மகாராஷ்டிராவை அவதூறு செய்ய சமூக வலைதளங்கள் பயன்படுத்தப்படுவதாக சிவசேனா குற்றஞ்சாட்டியுள்ளது.

மும்பை, மகாராஷ்டிரா குறித்து அவதூறு பரப்ப உதவும் சமூக வலைதளங்கள்- சிவசேனா

author img

By

Published : Sep 15, 2020, 7:57 PM IST

மகாராஷ்டிராவிற்கும், மும்பைக்கும் எதிரான அவதூறு கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதாக சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா குற்றஞ்சாட்டியுள்ளது. மகாராஷ்டிராவும் மராட்டியர்களும் கடந்த சில நாள்களாக இக்கட்டான சூழ்நிலையை அனுபவித்து வருகின்றனர்.

மும்பை மற்றும் மகாராஷ்டிராவை அவதூறு செய்ய சமூக ஊடகங்கள் வெகுவாக பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், இதுபோன்ற வதந்திகளுக்கு யாரேனும் தங்கள் பாணியில் பதிலளித்தால், அவதூறு பரப்பும் பயனர்களின் பேச்சு சுதந்திரம் குறித்து கவலை தெரிவிக்கின்றனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணாவின் சமீபத்திய கருத்தையும் சுட்டிக்காட்டிய நாளிதழ், "நீதிபதிகள் இப்போது தாகமாக வதந்திகள் மற்றும் அவதூறான சமூக ஊடக பதிவுகளுக்கு பலியாகிறார்கள். ஏனெனில் அவர்கள் தங்களது சொந்த கருத்துகளை வெளிப்படுத்துவதிலிருந்து தடுக்கப்படுகின்றனர். நீதிபதியின் கருத்துகள் உண்மையானவை எனத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, மும்பையில் ஓய்வுபெற்ற கடற்படை அலுவலரை மகாராஷ்டிரா முதலமைச்சரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேவை ஒரு கார்ட்டூன் கொண்டு பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக நடிகை கங்கனா ரணாவத்திற்கும், சிவசேனாவிற்கும் வார்த்தைப் போர் நடைபெற்று வந்த நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் மும்பை உள்ளது என்று கங்கனா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.