ETV Bharat / bharat

பாஜகவில் ஆரம்பமாகிறதா அதிகாரப் போட்டி?

author img

By

Published : Jul 3, 2019, 3:47 PM IST

டெல்லி: பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருக்கும் 17 சமூகங்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க உத்தரப் பிரதேச அரசு எடுத்த முடிவை எதிர்த்து மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் மாநிலங்களவையில் பேசியுள்ளது பாஜக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரபோட்டி

பாஜகவில் தலைமையை மதித்து நடப்பது என்பது வாஜ்பாய் காலத்தில் இருந்தே அரிதிலும் அரிதான செயலாகும். அதற்கு முக்கிய காரணமாக இருப்பது தலைமையை தவிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அக்கட்சியின் மேல் கொண்டு இருந்த செல்வாக்காகும். ஆனால் 2014ஆம் ஆண்டுக்கு பிறகு மோடி, அமித் ஷா கூட்டணி பாஜகவின் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தது.

கட்சியினர் செய்யும் ஒவ்வொரு செயலிலும் தலைமையின் பங்கு இருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர். தலைமையை தாண்டி ஒன்றுமே செய்ய முடியாத அளவுக்கு கட்சி சென்றுவிட்டதாகவும் கூறினர். இந்நிலையில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருக்கும் 17 சமூகங்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க முடிவெடுத்தது.

இதுகுறித்து மாநிலங்களவையில் மத்திய சமூகநீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட், "உத்தரப் பிரதேச அரசு எடுத்த முடிவு சரியானது அல்ல. பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இருக்கும் சமூகங்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கும் அதிகாரம் அரசியலமைப்புக்கு மட்டும்தான் உள்ளது. முதலில் உத்தரப் பிரதேச அரசு இதுகுறித்து எங்களிடம் தெரிவித்திருக்க வேண்டும்" என்றார்.

ஒரே கட்சியில் இருக்கும் ஒரு முதலமைச்சர் எடுத்த முடிவை மத்திய அமைச்சர் எதிர்த்து பேசியிருப்பது பாஜக வட்டாரத்தில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Intro:Body:

social justice minister thawarchand geholt takes on up cm yogi

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.