ETV Bharat / bharat

நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து சபாநாயகர் முக்கிய ஆலோசனை - கோவிட்-19 நாடாளுமன்றம்

கோவிட்-19 காலக்கட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முறையாக நடைபெற உறுப்பினர்கள் தகுந்த இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தியுள்ளார்.

Birla
Birla
author img

By

Published : Aug 27, 2020, 8:42 PM IST

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கான ஆயத்தப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்ற செயலர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில், நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கான உரிய வழிகாட்டுதல்களை மேற்கொள்ளவும், அதை அலுவலர்களும் உறுப்பினர்களும் முறையே பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் மக்களவை செயலர் ஸ்ரீவத்சவா, மாநிலங்களவை செயலர் தேஷ் தீபக் வர்மா ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக மழைக்கால கூட்டத் தொடருக்கான தேதியை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு முடிவு செய்துள்ளது. அதன்படி, மொத்தம் 18 அமர்வுகள் நடைபெறும் வகையில் வரும் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் அக்டோபர் 1ஆம் தேதிவரை கூட்டத்தொடர் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்பதால் இம்முறை நாடாளுமன்றத்தின் இரு அவைகள், அரங்குகள் ஆகியவற்றை சேர்த்து பயன்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மோடி, யோகி மீது விமர்சனம் வைத்த ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.