ETV Bharat / bharat

சமூக வலைத்தளங்களும் கோவிட்-19 வைரஸ் தொற்றும்! - Community Eye Health

கோவிட்-19 வைரஸ் தொற்று போல நாட்டிற்கு பொது சுகாதார அவசர நிலைகள் ஏற்படும்போது, சமூக வலைத்தளங்கள் மூலம் உதவி தேவைப்படும் மக்களை எளிதில் அடையாளம் காண முடியும். சமூக வலைத்தளங்களால் பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்றாலும், அது இருபுறம் கூர்மையாக உள்ள கத்தியைப் போன்றதே. சமூக வலைத்தளங்களால் நிறைய ஆபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

Social Distancing and Mental Health: Action towards Coronanxiety and Fear  Social Distancing and Mental Health  Coronanxiety and Fear  சமூக வலைதளம், கோவிட்-19 வைரஸ் தொற்று, பயம், கரோனா,  Community Eye Health  ஸ்ரீதிவ்யா முக்பல்கர்

author img

By

Published : Apr 8, 2020, 3:54 PM IST

இன்றைய நாள்களில், மக்களை எளிதில் தொடர்பு கொள்ள சமூக வலைத்தளங்கள் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக மாறிவருகிறது. பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்கள் நமது அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகக் கலந்துவிட்டன.

இந்தத் தளங்கள் மூலம் நாம் கூற விரும்பும் செய்திகளை, புகைப்படங்களை எளிதில் மக்களிடையே பகிர முடியும். இவை குறித்து நடைபெற்ற ஆய்வுகளில், சமூக வலைத்தளங்கள் என்பவை நமது செய்திகளைப் பகிர மட்டுமல்ல அவை இணையப் பயன்பாட்டை அதிகரித்து மக்களிடையே தகவல் தொடர்பை அதிகரித்துள்ளது தெளிவாகத் தெரிகிறது.

கோவிட்-19 வைரஸ் தொற்று போல நாட்டிற்கு பொதுச் சுகாதார அவசர நிலைகள் ஏற்படும்போது, சமூக வலைத்தளங்கள் மூலம் உதவி தேவைப்படும் மக்களை எளிதில் அடையாளம். காண முடியும் சமூக வலைத்தளங்களால் பல்வேறு நன்மைகள் ஏற்படும் என்றாலும், அது இருபுறம் கூர்மையாக உள்ள கத்தியைப் போன்றதே. சமூக வலைத்தளங்களால் நிறைய ஆபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

மக்களுக்குத் தேவைப்படும் தகவல்களை சமூக வலைத்தளங்களில் எளிதில் பகிரலாம்; அதே நேரம் மக்களை அச்சத்தில் தள்ளும் தவறான தகவல்களும் இவற்றின் மூலம் மிக எளிதில் பரவும் அபாயம் உள்ளது. எனவே, இதுபோன்ற தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிரும் முன் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கடந்த சில வாரங்களாகவே சமூக வலைத்தளங்களில் இந்த இரு வேறு முகங்கள் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. கை கழுவுதல், சமூக விலகல், சுய தனிமைப்படுத்திக் கொள்ளுதல் ஆகியவை குறித்த நல்ல தகவல்கள் மக்களிடையே சென்றடை சமூக வலைத்தளங்கள் மிகவும் பயன்பட்டன. உதாரணமாக உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், இந்திய பொது சுகாதார அறக்கட்டளை, பல தொண்டு நிறுவனங்கள் கைகளை 20 நொடிகள் வரை எவ்வாறு சுத்தமாகக் கழுவ வேண்டும் என்பதைப் பாடல்களைக் கொண்டு விளக்கும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துவருகிறார்ரகள்.

கடந்த மார்ச் 22ஆம் தேதி, பிரதமரின் அழைப்பை ஏற்றுச் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் கரகோஷம் எழுப்பிப் பாராட்டியது மட்டுமின்றி அதைத் தங்கள் சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்தனர். மக்கள் தங்களுக்கு வழங்கும் ஆதரவையும் பாராட்டையும் சுகாதாரப் பணியாளர்கள் இதன் மூலம் தெரிந்துகொள்ள முடிந்தது. சுகாதாப் பணியாளர்களுக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் தேவையான உணவுப் பொருள்களையும் தேவைப்படும் அத்தியாவசியப் பொருள்களையும் மக்களிடமிருந்து பெறவும் சமூக வலைத்தளங்கள் பெரிதும் பயன்படுகிறது.

ஊரடங்கு உத்தரவை ஏன் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை விளக்கும் வீடியோக்களையும் செய்திகளையும் பிரபலங்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்கின்றனர். ஆராய்ச்சியாளர்களும் செய்தியாளர்களும் சுகாதாரப் பணியாளர்களும் அரசின் நடடிக்கைள் குறித்தும் வைரஸ் பரவல் குறித்த செய்திகள் குறித்தும் மக்களிடையே விவாதிக்கின்றனர். மேலும், மக்களுக்குத் தேவையான ஆதரவையும் அவர்கள் வழங்குகின்றனர். செய்தி சேனல்களுக்கும் சமூக வலைத்தளங்கள் புதிய மற்றும் கூடுதல் பார்வையாளர்களை வழங்குகின்றன.

ஒரு தம்பதி கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தவறான தகவலை வாட்ஸ்அப் மூலம் பரப்பியதற்காக மும்பையைச் சேர்ந்த ஒருவரும் கோலாப்பூரைச் சேர்ந்த ஒருவரும் இருவேறு நிகழ்வுகளில் கைது செய்யப்பட்டனர். சமூக வலைத்தளங்களில் கோவிட்-19 வைரஸ் தொற்று குறித்து தவறான தகவல்களைப் பரப்பியதற்காகக் கொல்கத்தாவைச் சேர்ந்த 29 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். மாட்டின் கோமியத்தைக் குடித்தால் வைரஸ் தொற்றிலிருந்து எப்படி எளிதில் தப்பிக்கலாம் என்பதை விளக்கும் தவறான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவின.

சமூக வலைத்தளங்களில் பரவும் தவறான தகவல்கள் 4 வகைப்படும்

மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதி சில அறிவிக்கப்படாத தவறான தகவல்கள் சிலரால் பரப்பப்படுகிறது. இவை அச்சத்தால் பரப்பப்படுகிறதே தவிர இது போன்ற தகவல்களுக்கு எவ்வித ஆதாரமும் இருக்காது.

தங்கள் நம்பிக்கையின் அடிப்படையில், முன்வைக்கப்படும் தீமை விளைவிக்கும் செய்திகள்.

மக்களை அச்சப்படுத்த வேண்டும் என்பதற்காகவே பரப்பப்படும் தவறான தகவல்கள்

வேகமாக மாறிவரும் சூழ்நிலையில் காலாவதியான மற்றும் தவறான செய்திகள்.

இதுபோன்ற தவறான தகவல்களை நம்பிவிடாமல் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த சில சிறந்த வழிகள் உள்ளன. பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்றவற்றில் நீங்கள் பார்க்கும் செய்திகளை உறுதிப்படுத்திச் சரி பார்க்க வேண்டும்.

ஆதாரம்: நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து செய்திகள் வருகிறதா அல்லது யாரென்று கண்டறிய முடியாதவற்றிலிருந்து செய்திகள் வருகிறதா என்பதைச் சரி பார்க்கவும். ஆசிரியர்கள் அந்த குறிப்பிட்ட துறைகளில் சிறந்தவர்களாக என்பதைக் கண்டறியவும். செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள், ரேடியோ போன்ற நம்பத்தகுந்தவற்றிலிருந்து வரும் செய்திகளுடன் வைத்துச் சரிபார்க்கவும். இருப்பினும் அந்தச் செய்தி குறித்து உங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என்றால் நிபுணரிடம் கேட்பதே சிறந்தது.

செய்தியின் தரம்

ஒரு தகவலானது தரவுகளை அடிப்படையாகக் கொண்டதா அல்லது ஒருவரின் சொந்த கருத்தை அடிப்படையாகக் கொண்டதா என்பதைக் கட்டாயம் சரி பார்க்க வேண்டும். அதில் இலக்கணப் பிழை அல்லது எழுத்துப் பிழை உள்ளதா என்பதை ஆராயவும் - செய்தியைப் பகிரக் கூடாது என்பதற்கான ஒரு சிறந்த காரணம். எந்தவொரு தெளிவான தகவல்களுமின்றி பரபரப்பான கூற்றுக்களை உருவாக்க முயல்கிறது அல்லது சம்பந்தப்பட்ட நபர்கள், நேரம், இடங்கள் குறித்து போதுமான விவரங்களைக் கொண்டிருக்கவில்லை என்றால் அவற்றைப் பகிரக் கூடாது. செய்தி உருவாக்கியவர் தரவுகளை விட்டுவிட்டு மக்களை ஈர்க்க உணர்ச்சிகரமான வார்த்தைக் கட்டமைப்புகளை பயன்படுத்திருக்கூடாது.

தரவுகளின் உண்மைத்தன்மை

பொய்யான தகவல்கள் பொதுவாக ஆதாரங்களையோ, உண்மையான தளங்களையோ, சரியான தரவுகளையோ மேற்கோள்காட்டியிருக்காது. முக்கியமான விதி என்னவென்றால், எந்தவொரு அசாதாரண கூற்றுக்கும் அதற்கு நிகரான ஆதாரங்கள் தேவை. இவை குறிப்பிடப்பட்டுள்ள தரவுகளை எளிதில் சரிபார்க்க உதவுகிறது. ஒரு ஆராய்ச்சி குறித்துக் கட்டுரை கூறியிருந்தால், அதில் கூறப்பட்டுள்ள தரவுகள் மற்ற ஆராய்ச்சியாளர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

ஒரு புகைப்படம் போலியானதா அல்லது உண்மையானதா என்பதைக் கூகுளின் ரிவர்ஸ் இமேஜ் செர்ச்(Google reverse image) மூலம் எளிதில் கண்டறியலாம். புகைப்படத்தைக் கூகுளின் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் தளத்தில் பதிவிட்டாலே அந்தப் புகைப்படத்தைக் கொண்ட மற்ற தளங்களை நாம் காணலாம். இதன் மூலம் ஒரு புகைப்படத்தின் உண்மைத்தன்மை எளிதில் கண்டறியலாம்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள முறைகளைக் கொண்டு ஒறு செய்தி, மின்னஞ்சல், வீடியோ, புகைப்படம் உண்மையானதா இல்லையா என்பதை ஒருவர் எளிதில் கண்டறியலாம். ஒரு செய்தியைப் பகிரும் முன் ஒரு முறைக்கு இரு முறை சிந்திக்க வேண்டும். உங்களுக்கு வந்த தகவல் தவறானது என்றால் உங்களுக்கு அனுப்பியவரிடம் அதைத் தெரியப்படுத்தவும்.

கட்டுரையாளர் கம்யூனிட்டி ஐ ஹெல்த் (Community Eye Health) இதழின் ஆசிரியர் ஸ்ரீதிவ்யா முக்பல்கரால் எழுதப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.