காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் மிதமானது முதல் பலத்த பனிமழை நேற்று பெய்தது. குறிப்பாக, வடக்குக் காஷ்மீரின் குப்வாரா, பந்திப்போரா, பாரமுல்லா, மற்றும் வடக்குக் காஷ்மீரின் கந்தெர்பால் மாவட்டங்களுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பல இடங்களில் பனிபொழிவில் சிக்கிய மக்களை, ராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று, பனிகளை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. முகலாய சாலையில் உள்ள பனிபொழிவை ஜேசிபி மூலம் அகற்றி வருகின்றனர்.
இந்தச் சாலை தான் தெற்கு காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தை ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களுடன் இணைக்கிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தகவலின்படி, " நேற்று ( திங்கள்கிழமை) ஜம்முவில் அதிகபட்ச வெப்பநிலை 20.3 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை திங்களன்று 12.6 டிகிரி செல்சியஸாகவும் காணப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.