தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. மனிதர்களும் தொழில்நுட்ப சாதகங்களுக்கு அடிமையாகி வருகின்றனர். உலகில் தினந்தோறும் தொழில்நுட்பத்தால் ஏதேனும் தவறுகள், திருட்டுகள் நடைபெற்றுதான் வருகின்றன. அதனை யாராலும் தடுத்தும் நிறுத்த முடியவில்லை.
இந்நிலையில் ராஜேஷ் குமார் என்பவர் ஸ்மார்ட் டிவியில் ஆபாசப் படம் பார்ப்பதை வாடிக்கையாக வைத்து இருந்திருக்கிறார். பின்னர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட ராஜேஷ் மனைவியுடன் விட்டில் உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் ஒருநாள் வழக்கம்போல ஆபாச வலைத்தளத்தில் வீடியோ பார்த்துள்ளார். அப்போது, அவர் மனைவியுடன் அந்தரங்கமாக இருக்கும் வீடியோ கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அந்த இணையதளத்தில் புகார் அளிக்கப்பட்டு விடியோ இணையத்தில் இருந்து நீக்கப்பட்டது.
இதனையடுத்து வீடியோ எப்படி இணையதளத்திற்குச் சென்றது பற்றி ராஜேஷ் ஆராயும்போது அதிர்ச்சி தகவல் கிடைத்தது. ராஜேஷ் படுக்கையிலிருந்த ஸ்மார்ட் டிவியை ஹேக் செய்து அதில் பொருத்தப்பட்டிருந்த கேமரா மூலமாக வீடியோ பதிவு செய்துள்ளனர். ராஜேஷ் ஆபாச வலைத்தளம் பார்ப்பதை வாடிக்கையாக வைத்திருந்ததால் ஹேக்கர்கள் உள்ளே நுழைவதற்கு மிகவும் எளிதாக இருந்திருக்கிறது.
தற்போது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியில் வைஃபை இணைப்பு மூலமாக 24மணி நேரமும் இணையச் சேவை இருப்பதால் ஹேக் செய்ய வாய்ப்புகள் ஏராளம். இச்சம்பவங்களில் தப்பிப்பதற்குத், தேவை இல்லாத நேரங்களில் ஸ்மார்ட் டிவியில் இருந்து வைஃபை சேவையைத் துண்டிப்பதும், ஆபாச வலைத்தளங்களை டிவியில் பார்ப்பதைத் தவிர்ப்பதே நல்லது. தேவையில்லாத நேரத்தில் ஸ்மார்ட் டிவியின் கேமராவை துணி கொண்டு மறைத்து வைத்திருப்பதும் நல்லது'' என்கின்றனர் வல்லுநர்கள்.
ஹேக்கர்கள் ஆன்ட்ராய்டு செல்போன், கம்யூட்டர்களை மட்டும் ஹேக் செய்வதில்லை. மக்கள் வீடுகளில் ஏதேனும் ஒரு ஸ்மார்ட் சாதனம் பயன்படுத்தினால் போதும் கண் இமைக்கும் நேரத்தில் உள்ளே நுழைந்து விடுகிறார்கள். டிஜிட்டல் உலகில் ஓடவும் முடியாது. ஒழியவும் முடியாது என்பதே அசைக்கப்படாத உண்மை.