பல்வேறு மண்டலங்களிலுள்ள கரோனா வைரஸ் தொற்றின் நிலை குறித்த முழுமையான மற்றும் சமீபத்திய தகவல்களை ஒருங்கிணைந்து பயன்படுத்த புனே, சூரத், பெங்களூரு, தும்கூர் ஆகிய ஸ்மார்ட் சிட்டிகள் பல வழிமுறைகளைப் பின்பற்றுகின்றன.
இது கோவிட்-19 வைரஸ் பரவல் குறித்துத் துல்லியமான தகவல்களைப் பெற நாட்டிலுள்ள தலைசிறந்த டேட்டா ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
புனே
புனே ஸ்மார்ட் சிட்டி டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் புனே மாநகராட்சியுடன் இணைந்து கரோனா வைரஸ் தொற்று குறித்த ஒருங்கிணைந்த தரவுகளைக் கொண்ட டாஷ்போர்டை உருவாக்கியுள்ளனர். இது வைரஸ் பரவல் குறித்த தகவல்களை துல்லியமாகத் தெரிந்துகொள்ள உதவும்.
நகரத்தின் அனைத்து பகுதிகளும் geo-spatial தகவல் அமைப்புகளைக் கொண்ட வரைபடமாக்கப்பட்டுள்ளன.
கோவிட்-19 வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட இடங்களை வைரஸ் எளிதில் பரவ சாதகமான மண்டலங்களாக மாநகராட்சி நிர்வாகம் வரைபடங்களில் மாற்றுகின்றன.
Heat-mapping தொழில்நுட்பத்தையும் முன்கணிப்பு பகுப்பாய்வுகளையும் பயன்படுத்தி, வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் திட்டங்களை மாநகராட்சி நிர்வாகம் உருவாக்குகின்றது.
சுகாதாரத் துறையின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நாயுடு தொற்று நோய் மருத்துவமனையிலிருந்து கண்காணிக்கப்படுகின்றன.
மேலும், இதில் கோவிட்-19 வைரஸ் அறிகுறி உள்ளவர்களின் உடல்நிலை குறித்த தகவல்களும் சுய தனிமைப்படுத்தலில் வீட்டில் உள்ளவர்கள் குறித்த தகவல்களும் கண்காணிக்கப்படுகிறது.
சூரத்
வைரஸ் பரவல் குறித்து சமீபத்திய தகவல்களை வழங்கும் வகையில் சூரத் மாநகராட்சி, தனது இணையதளத்தில் ஆன்லைன் டாஷ்போர்டை உருவாக்கியுள்ளது.
அதில் வைரஸ் தொற்று குறித்து எத்தனை பேரிடம் சோதிக்கப்பட்டுள்ளது, அவர்களில் எத்தனை பேருக்கு வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, எத்தனை பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர், எத்தனை உயிரிழப்புகள் இதுவரை ஏற்பட்டுள்ளன என்பவை குறித்த புள்ளிவிவரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
கோவிட்-19 வைரஸ் தொற்று நகரில் எவ்வாறு பரவுகிறது என்பது குறித்த தகவல்களும் அதில் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் புதிதாக எத்தனை பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுகிறது, வயது வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, பாலின வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை போன்றவற்றையும் பொதுமக்கள் இதில் தெரிந்துகொள்ளலாம்.
பெங்களூரு, தும்கூர்
போர் காலத்தில் இருப்பதைப் போல ஒரு 'War room"ஐ இரு மாநகராட்சிகளும் உருவாக்கியுள்ளன.
கோவிட்-19 வைரஸ் தொற்று ஒருவருக்கு உறுதி செய்யப்படும்பட்சத்தில், அவரின் இருப்பிடத்தைச் சுற்றி 8 கிமீ சுற்றளவில் இருக்கும் மக்கள் தீவிரக் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுகின்றனர்.
மேலும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்கள் வயது, பாலின, மண்டலங்கள் வாரியாக தினசரி வழங்கப்படுகின்றன.
War roomஇல் மேற்கொள்ளப்படும் வேலைகள்
- சி.சி.டி.வி கண்காணிப்பு
- சுகாதாரத்துறை பணியாளர்களின் இருப்பிடக் கண்காணிப்பு
- நகரின் பல்வேறு மண்டலங்களில் வைரஸ் தடுப்புக்கான முன்கணிப்பு பகுப்பாய்வு
- சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு மெய்நிகர் பயிற்சி
- ஆம்புலன்ஸ், கிருமிநாசினி வண்டிகளின் இருப்பிடக் கண்காணிப்பு
- வீடியோ கான்பரன்சிங்
- டெலி-கவுன்சிலிங்
- டெலி-மெடிசின் மூலம் மருத்துவ சேவைகளும் வழங்கப்படுகின்றன.
இதையும் படிங்க: கோவிட் -19 வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வழி என்ன?