கர்நாடக மாநிலம், தாவன்கரே மாவட்டம், சிகாடேரி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். முன்னதாக அந்த கர்ப்பிணி ஒரு தனியார் ஆய்வகத்தில் கரோனா பரிசோதனை மேற்கொண்டார். பின்னர் அந்த கர்ப்பிணிக்கு சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்தது.
அப்போது, பரிசோதனையின் முடிவில் கர்ப்பிணிக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.
இதன்காரணமாக மருத்துவர்கள் குழந்தையைத் தாயிடம் கொடுக்காமல், ஐசியுவிற்கு மாற்றினர். இதையடுத்து, அந்தப் பெண்ணிற்கு மீண்டும் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.
ஏனெனில், அந்தப் பெண் எந்த ஒரு கட்டுப்பாட்டு மண்டலத்தையும் சேர்ந்தவர் அல்ல, அதேபோல் கரோனா பாதிக்கப்பட்டவருடன் தொடர்பிலும் இல்லை. இந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு கரோனா உறுதி செய்யப்படவில்லை.
இது குறித்து தாவன்கேர் காவல் துறை துணை ஆணையர் மகாந்தேஷ் பிலகி, தனியார் ஆய்வகத்திற்கு ஒரு சிபாரிசு கடிதம் எழுதினார். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக, கடுமையான சுவாசப் பிரச்னையால் பிறந்து ஆறு நாள்களே ஆன குழந்தை இறந்தது.
இது குறித்து குழந்தையின் தந்தை கூறுகையில், "தவறான கரோனா பரிசோதனை முடிவின் காரணமாக தாய் குழந்தையைக் கூட பார்க்க முடியவில்லை.
குழந்தையின் குடலில் தொற்று ஏற்பட்டு, கடுமையான சுவாசப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்துள்ளது. குழந்தையின் உடலை ஒரு நாள் போராட்டத்திற்கு பிறகே கையில் பெற்றோம்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: நாகையில் மேலும் 62 நபர்களுக்கு கரோனா தொற்று...!