இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒரு லட்சத்து பத்தாயிரத்தைக் கடந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் சிறு, குறு வியாபாரிகள் முதல் நடுத்தர குடும்பங்களில் இருப்போர் வரை, பலர் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வாழ்வாதாரமின்றித் தவிக்கும் மக்களில் பலர் உண்ண உணவில்லாமல் வாடும் சூழல் ஏற்பட்டதால், அரசியல் கட்சிகள் முதல் பல தனியார் தொண்டு நிறுவனங்கள் வரை, தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள பங்களா சாஹீப் குருத்துவாராவில், 'மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது' என்ற சீக்கிய மதப்படி இலவசமாக உணவு, சமைத்து அளித்து வருகிறார்கள்.
குருத்துவாராவில் சமைப்பவர்கள் அவ்விடத்திலேயே தங்கி உணவு சமைத்து வருகிறார்கள். சமைக்கும்போது முகக்கவசங்கள் அணிந்து கொண்டு, சமையல் அறையில் நாள் ஒன்றுக்கு மட்டும் பத்தாயிரம் பேர் பசியாறும்படி உணவுகளை சமைத்து, டெல்லியில் உணவில்லாமல் தவித்து வருபவர்களுக்கு உணவு அளித்து வருகிறார்கள்.