கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பாவுடன் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தொலைபேசியில் கலந்துரையாடினார். அப்போது, ஏழைகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு தொகுப்பு வழங்க வலியுறுத்தினார்.
மேலும் இந்திரா உணவகங்கள் மூலம் ஏழை மக்களுக்கு உணவு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் வைத்தார்.
கரோனா தொற்று காரணமாக நாடு முழுக்க 21 நாட்கள் பூட்டுதல் (லாக் டவுன்) அமலில் உள்ளது. இது வருகிற 14ஆம் தேதி வரை அமலில் இருக்கும். இந்தியாவில் கரோனா (கோவிட்19) வைரஸூக்கு இதுவரை நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
109 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் பெருந்தொற்றின் தாக்கம் உலகளவில் 160க்கும் மேம்பட்ட நாடுகளில் காணப்படுகிறது.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு, மாநிலங்கள் வாரியாக முழு விவரம்