கர்நாடகாவில் ஆளும் கட்சியினரிடையே அதிருப்தி ஏற்பட்ட நிலையில் இதுவரை 16 எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ளனர். இதில் 8 பேருடைய கடிதம் சபாநாயகர் ரமேஷ் குமாரால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் பேரவைக் குழு தலைவரான சித்தராமையா, அவரது ட்விட்டர் பக்கத்தில், "நீங்கள் இம்மாநிலத்திற்கே உரியவர். அனைத்து கட்சியினருக்கும் சமமானவர். உங்களை சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. தற்போது மாநிலத்தில் நிகழ்ந்து வரும் அரசியல் சூழலை எடுத்துரைக்கவே உங்களை சந்திக்க அனுமதி தேவைப்படுகிறது. காவல்துறை அவர்களுடைய விருப்பத்திற்கு செயல்படுகிறார்களா இல்லை. ஆளுநரின் வழிகாட்டுதலின் பேரில் செயல்படுகிறார்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.