டெல்லி: கலாசார உறவுகளுக்கான இந்திய கவுன்சிலின் துணை இயக்குநர் சுப்தர்ஷினி திரிபாதி, கஜகஸ்தானுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கலாசார உறவுகளுக்கான இந்திய கவுன்சிலின் துணை இயக்குநராக பணிபுரியும் சுப்தர்ஷினி கஜகஸ்தான் நாட்டின் இந்தியத் தூதராக நியமணம் செய்யப்படுகிறார். விரைவில், அவர் பொறுப்பேற்பார்" எனக் கூறப்பட்டுள்ளது.
சுப்தர்ஷினி திரிபாதி 1994ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுத் துறை அலுவலராக தனது குடிமைப்பணியைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: '150 நாடுகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்கியது இந்தியா' - வெளியுறவுத்துறை அமைச்சர்