ETV Bharat / bharat

சிறப்பு ரயில்களின் தாமதத்திற்கு இதுதான் காரணம் - ரயில்வே வாரிய தலைவர்

டெல்லி: ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் வழி மாறியும், மிகவும் தாமதாகவும் சென்றடைகிறது என்று தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்துவந்த நிலையில், இது குறித்து ரயில்வே வாரிய தலைவர் வினோத் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

author img

By

Published : May 30, 2020, 11:24 AM IST

railway
railway

நாடு முழுவதும் கரோனா வைரசின் (தீநுண்மி) தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மார்ச் 25ஆம் தேதிமுதல் நாடு முழுவதும் பொது ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கு காரணமாக பொதுப்போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டதால், குடிபெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்குச் செல்லமுடியாமல் தவித்துவந்தனர்.

கரோனாவின் தீவிரம் காரணமாக ஊரடங்கு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால், குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லத் தொடங்கினர். இதனையடுத்து, தொழிலாளர்கள் அவர்களது ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக சிறப்பு ஷ்ராமிக் ரயில்களை மே ஒன்றாம் தேதிமுதல் மத்திய அரசு இயக்கிவருகிறது. இதன்மூலம் சுமார் 52 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களது சொந்த மாநிலம் திரும்பியுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்தது.

இவ்வாறு இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் பல வழிமாறி வெவ்வேறு மாநிலங்களுக்குச் சென்றுவிட்டதாகவும், ரயில்கள் இயல்பான நேரத்தைவிட மிகவும் தாமதமாக செல்வதாகவும், இதில் பயணிக்கும் தொழிலாளர்களுக்குத் தேவையாக உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருள்கள் ஏதும் வழங்கப்படுவது இல்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. இது சொந்த ஊர் செல்லும் முனைப்பில் உள்ள தொழிலாளர்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மேலும் சோர்வடையச் செய்தது.

இந்நிலையில், இது குறித்து ரயில்வே வாரியத்தின் தலைவர் வினோத் குமார் யாதவ் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், "நாடு முழுவதும் இயக்கப்பட்டுவரும் மூன்றாயிரத்து 840 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில், நான்கு ரயில்கள் மட்டுமே தவறுதலாக வேறு மாநிலங்களுக்குச் சென்றுள்ளது. போக்குவரத்துச் சிக்கல் காரணமாக 1.85 விழுக்காடு ரயில்களின் வழித்தடங்கள் மாற்றி அமைக்கப்பட்டன.

மே 20 முதல் 24ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில், உத்தரப் பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களுக்கு அதிக ரயில்களை அனுப்ப வேண்டிய அவசியம் இருந்தது. நாடு முழுவதிலிருந்து இயக்கப்படும் ரயில்களில் 90 விழுக்காடு ரயில்கள் இந்த இரண்டு மாநிலங்களுக்குச் செல்கின்றன. இந்த வழித்தடங்களில் ஏற்பட்ட போக்குவரத்துச் சிக்கல் காரணமாக 71 ரயில்கள் திருப்பிவிடப்பட்டன" எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பு ரயில்கள் மிகவும் காலதாமதமாக செல்கின்றன என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ள ரயில்வே வாரியம் தலைவர், சராசரியாக விரைவு ரயில்கள் செல்லும் வேகத்தைவிட சிறப்பு ரயில்கள் வேகமாக இயக்கப்படுகின்றன என்றார்.

மேலும் அவர், "மே 28ஆம் தேதிவரை மொத்தம் மூன்றாயிரத்து 840 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் 52 லட்சம் பயணிகள் சென்றுள்ளதாகவும், கடந்த ஒரு வாரத்தில் இயக்கப்பட்ட ஆயிரத்து 524 ரயில்கள் மூலம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றடைந்துள்ளனர்.

ஷ்ராமிக் சிறப்பு ரயில்களுக்கான கோரிக்கைகள் தற்போது குறைந்துவிட்டன. குடிபெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் தங்களது சொந்த மாநிலங்களுக்குச் சென்றடையும்வரை இந்த ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னை போக்குவரத்து பணியாளர்கள் 50% பேர் பணிக்கு திரும்ப உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.