கடந்த இரு நாள்களாக டெல்லியில் தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் வன்முறையில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் இது அதிர்வலையை ஏற்படுத்திவருகிறது. இதில் சிக்கி தலைமைக் காவலர் ரத்தன் லால் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். காவல் துறையைச் சேர்ந்த 56 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
டெல்லியின் சாந்த் பாக் பகுதியில் நடைபெற்ற கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர காவல் துறையினர் கண்ணீர் புகை வீசினர். காராவால், மஜ்பூர், சாந்த் பாக், பாபர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த வன்முறையில் சிக்க பத்திரிகையாளர் ஒருவர் தாக்கப்பட்டார்.
வன்முறை குறித்து விளக்கமளித்த டெல்லி காவல் துறை, "தேவைக்கேற்ப பாதுகாப்புப் படைகள் இல்லாததே வன்முறைக்குக் காரணம். இது உள் துறை அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. காவல் துறையைச் சேர்ந்த ஆயிரம் பேர் மட்டுமே வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களில் குவிக்கப்பட்டனர்" எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: டெல்லி வன்முறை - ‘144 தடை, மக்கள் அமைதி காக்க வேண்டும்’