ETV Bharat / bharat

சுடு எண்ணெய்யிலிட்டு குழந்தையின் கையை காயப்படுத்திய கொடூர பாட்டி - பஞ்சாப்பில் பயங்கரம்! - லூதியான மாகணம்

லூதியானா: குழந்தையின் கையை சுடு எண்ணெய்யிலிட்டு காயப்படுத்திய பாட்டி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Shocking! Woman dips hand of two-year-old granddaughter in Ludhiana

author img

By

Published : Mar 16, 2020, 1:26 PM IST

பஞ்சாப் மாநிலம் லூதியான மாவட்டத்திலுள்ள பஞ்சசீலம் பகுதியில் வசித்து வருபவர் சங்கீதா. இவருக்கு ரோஸல் என்ற இரண்டு வயது பெண்குழந்தையுள்ளது. தனது கணவர் வீட்டில் வசித்து வரும் இவரிடன் ஆண் குழந்தை பெற்றுத்தருமாறு அவரது மாமியார் தர்ஷனா ராணி அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கடந்த சனிக்கிழமை, சங்கீதா வீட்டில் இல்லாத போது, தர்ஷனா ராணி தனது பேத்தியின் கையை கொதிக்கும் எண்ணெய் கொப்பரைக்குள் விட்டு காயப்படுத்தியுள்ளார். சிறிது நேரத்தில் வீடு திரும்பி குழந்தையை கண்டு அதிர்ச்சியடைந்த சங்கீதா, உடனடியாக குழந்தையை மீட்டு அருகிலுள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

இதனையடுத்து ஜோத்வேல் பஸ்தி காவல்நிலையத்தில் சங்கீதா தனது மாமியார் மீது புகாரளித்துள்ளார். இதனையடுத்து ராணியை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுடு எண்ணெய்யில் குழந்தையின் கையை எரித்த கொடூர பாட்டி - பஞ்சாப்பில் பயங்கரம்!

இதுகுறித்து சங்கீதா கூறுகையில், தனக்கு பெண் குழந்தை பிறந்தது எனது மாமியார் ராணிக்கு பிடிக்கவில்லையென்றும், அதனால் என் குழந்தையை பலமுறை அவர் விற்க முயற்சித்தாதாகவும், ஆனால் அதனை நான் தடுத்து நிறுத்தியதால், தற்போது இப்படி குழந்தையை துன்புறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆண்குழந்தை வேண்டுமென்ற காரணத்திற்காக, தனது சொந்த பேத்தியின் கையை சுடு எண்ணெய்யில் விட்டு எரித்த பாட்டியின் செயல் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:உத்தரப்பிரதேத்தில் குழந்தைத் திருமணம் - பெற்றோர் மீது பாய்ந்தது வழக்கு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.