கோவிட்-19 பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் தளர்வளிக்கப்பட்டதை அடுத்து யுனெஸ்கோ உலக பாரம்பரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிம்லா - கல்கா ரயில் பாதையில் இன்று இந்தச் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக இயக்கப்படாமல் இருந்த கே.சி. -520 நீராவி லோகோ மோட்டிவ் என்ஜின் அதன் இரண்டு ஓட்டுநர்களுடன் இன்று காலை 11:05 மணி அளவில் தனது பயணத்தை சிம்லாவிலிருந்து மீண்டும் தொடங்கியது.
கைதாலிகாட் ரயில் நிலையத்தைச் சென்றடைந்த அது பின்னர் மாலை 4:30 மணியளவில், சிம்லா ரயில் நிலையத்திற்குத் திரும்பியது.
1905ஆம் ஆண்டில் வட பிரிட்டிஷ் லோகோமோட்டிவ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பாரம்பரிய இயந்திரம் கே.சி. -520 எஞ்சின் 1971ஆம் ஆண்டில் சேவையிலிருந்து வெளியேற்றப்பட்டது.
பின்னர், 30 ஆண்டுகள் கழித்து 2001ஆம் ஆண்டில் மீண்டும் பழுதுபார்க்கப்பட்டு, ரயில் பாதையில் இயக்க இசைவளிக்கப்பட்டது.
80 டன் வரை இழுக்கும் திறன்கொண்ட இந்த லோகோமோட்டிவ் என்ஜின் இன்பச் சுற்றுலா பயணங்களுக்குப் பயன்படுத்தப்பட்டுவருகிறது.
திருவிழாக் காலம் தொடங்கவுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவே அறியமுடிகிறது. அந்த வகையில் பயணிகளின் விருப்பத்தைப் பூர்த்திசெய்யும் வகையில் இருக்கைத் திறனை 30 விழுக்காட்டிலிருந்து 50 ஆக உயர்த்த ரயில்வே வாரியம் முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்தேர்வான இந்தச் சிறப்பு ரயில் நவம்பர் 30ஆம் தேதி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.