டெல்லி மாநிலத்தின் முதலமைச்சராக தொடர்ந்து மூன்று முறை பதவி வகித்த ஷீலா தீட்சித் இன்று காலமானார். அவர் இறப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ராகுல்காந்தி:
டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் மரண செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். காங்கிரஸ் கட்சியின் மகளான அவருக்கும், எனக்கும் தனிப்பட்ட அளவில் நெருக்கமான உறவு இருந்தது. அவரை பிரிந்து வாடும் அவர் குடும்பத்தாருக்கும், டெல்லி மக்களுக்கும் வருத்தத்தைத் தெரிவித்து கொள்கிறேன்.
பிரதமர் மோடி:
ஷீலா தீட்சித் மரணச் செய்தியை கேட்டதிலிருந்து வருத்தமாக உள்ளது. டெல்லியின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்காற்றியவர் ஷீலா தீட்சித். அவர் குடும்பத்தாருக்கும், ஆதரவாளர்களுக்கும் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரவிந்த் கெஜ்ரிவால்:
ஷீலா தீட்சித்தின் மரணம் டெல்லிக்கு மிகப்பெரிய இழப்பு. டெல்லி வளர்ச்சிக்காக அவர் செய்த சாதனைகள் என்றும் நினைவுகூரப்படும். அவரின் குடும்பத்தாருக்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.