டெல்லி முன்னாள் முதலமைச்சர் ஷீலா தீட்சித் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார். அவர் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, சுஷ்மா சுவராஜ், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஆகியோர் அவர் உடலுக்கு இன்று மரியாதை செலுத்தினர்.
அதேபோல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் ஷீலா தீட்சித் உடலுக்கு நேற்று நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.