நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையோடு வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் மனமுடைந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார்.
இதற்கு இந்தியா முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினரிடம் இருந்து எதிர்ப்பு எழுந்தது. தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வதில் தங்களுக்கு விருப்பமில்லை என்பதே காங்கிரஸ் தொண்டர்களின் குரல். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ஷீலா தீக்ஷித், ராகுல் காந்தியை ராஜினாமா செய்ய விடமாட்டோம் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், நாங்கள் ராகுல் காந்தியின் இல்லத்துக்கு அருகே செல்ல இருக்கிறோம், அவர் ராஜினாமா செய்வதில் உடன்பாடில்லை என்ற எங்கள் உணர்வை விவரிக்க விரும்புகிறோம். அவர் ராஜினாமா செய்வது கட்சிக்கு மாபெரும் இழப்பாகும், அது நேர்ந்துவிடக் கூடாது. இப்படி செய்ய வேண்டாம் என அவரிடம் மன்றாடிக் கேட்கப் போகிறோம் என தெரிவித்துள்ளார்.