தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை ஆங்கில ஊடகங்கள் நேற்று வெளியிட்டன. அனைத்து ஆங்கில ஊடகங்களும், பாஜகவிற்கு ஆட்சியமைக்க பெரும்பான்மை கிடைக்கும் என தெரிவித்துள்ளன. அது தொடர்பாக, பல்வேறு கட்சியினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
அதில், ‘இந்த கருத்துக் கணிப்புகள் அனைத்தும் தவறு. ஆஸ்திரேலியாவில், தேர்தலிலும், தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பிலும் எல்லாம் தவறாக இருந்தது. பல ஊடகங்கள் அரசிற்கு பயந்து உண்மையான முடிவுகளை வெளியிடவில்லை. அதனால் உண்மையான தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்வதற்கு மே 23ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.
