காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராகஇருக்கும் சசி தரூர், காங்கிரஸ் தலைவர்களில் சிறந்த ஆங்கிலப் புலமை பெற்றவராக அறியப்படுகிறார். ஆங்கில மொழியின் நீண்ட வார்த்தைகளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, அதற்கான விளக்கத்தையும் கொடுப்பதில் சசி தரூர் கில்லாடி.
இந்நிலையில், கேரளாவில் புதியதாய் திறக்கப்பட்டிருக்கும் ‘அப்பிட்டோ(Appiitto)’ என்ற அகமதாபாத் குழுமத்தின் உணவகத்தை புகைப்படம் எடுத்து, அதனை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
அந்த உணவகத்தின் பெயரை கேலி செய்யும் விதமாக அவர் வெளியிட்ட பதிவில், அகமதாபாத்தின் எழுத்தில் பிழையுடன், அதை வட மாநிலமாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்தியாவின் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் குஜராத்தில் அகமதாபாத் இருக்கிறது.
இதையடுத்து, எழுத்துப்பிழை செய்திருக்கும் சசி தரூரை ட்விட்டர் வாசிகள் கிண்டல் செய்துவருகின்றனர். அதுமட்டுமின்றி, வட மாநிலங்களை கிண்டல் செய்வதற்கு முன் யோசித்துவிட்டு பதிவிடுங்கள் என்றும் சிலர் அறிவுரைகளை வழங்கிவருகின்றனர்.