ETV Bharat / bharat

கரோனாவுக்கு பிந்தைய உலகம் கண்டுள்ள பெரும் மாற்றங்கள் என்ன? ஒரு அலசல்

author img

By

Published : Apr 17, 2020, 9:55 PM IST

கரோனா பாதிப்பு உலகளவில் என்னென்ன பெரும் மாற்றங்களை கொண்டுவந்தள்ளன என்பது குறித்து இந்திய வெளியுறவுத்துறை தூதுவர் விஷ்ணு பிரகாஷ் எழுதியுள்ள சிறப்புக் கட்டுரையின் தமிழாக்கம் இதோ...

Covid 19
Covid 19

சீனாவின் வுஹான் பகுதியில் தொடங்கி உலகம் முழுவதும் உள்ள சுமார் 120 நாடுகளில் பரவியுள்ள அபாயகரமான வைரஸான கரோனா இதுவரை சுமார் 1.5 லட்சம் உயிர்களை பலிகொண்டுள்ளது. இத்தகைய பாதிப்பை கண்டபின்பும் இதற்கான சரியான சிகிச்சையும், தடுப்பு மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அனைத்து நாடுகளும் சிக்கலைத் தீர்க்க விடைகளை தேடும் பணியில் தீவிரமாக களமிறங்கியுள்ளன.

இஸ்ரேல், கொரியா, ஜெர்மனி, சிங்கப்பூர், ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகள் வைரஸ் பாதிப்பை இதுவரை சாமர்த்தியமாக எதிர்கொண்டுள்ளன. இதில் புதிரான விவகாரம் என்னவென்றால், ஆதிக்க சக்திகளாகக் கருதப்படும் ஜி-7 நாடுகள் தான் இதில் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. அமெரிக்காவில் மட்டும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நாள்தோறும் இறப்பதாக செய்திகள் வருகின்றன.

சீனாவில் இதுபோன்ற வைரஸ் பாதிப்பு தொடங்கியது என்ற செய்தியோ, அதை அந்நாடு மறைக்க முற்பட்டது என்ற செய்தியோ உலகிற்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் உலக சுகாதார அமைப்பு போன்ற உயரிய நிறுவனத்திற்கு அழுத்தம் தந்து அவர்களிடம் நன்மதிப்பு பெறும் காரியத்தில் சீனா ஈடுபட்டுள்ளதே புதிய விஷயமாகும். இதன் காரணமாகவே கோவிட் -19 என்ற வெடிகுண்டு தங்களை தீடீரென்று ஒருநாள் தாக்கும் என்ற எச்சரிக்கை உணர்வை எந்த நாடுகளும் பெற முடியவில்லை.

எதிர்பாரத வைரஸ் தாக்குதலால் உலக நாடுகள் செய்வதறியாது தவிக்கின்றன. இதன் விளைவு, சீனாவின் மிகப்பெரும் உற்பத்தி நிறுவனங்களிடம் முக்கிய உபகரணங்களை எதிர்பார்த்து மேற்கத்திய நாடுகள் காத்து கிடக்கின்றன. குறிப்பாக முகக் கவசம், கையுறை, வென்டிலேட்டர் மட்டும் அல்லாது பாரசேடமால் போன்ற அடிப்படை மருந்துகளின் இருப்பு கூட தங்களிடம் இல்லாமல் மேற்குலகம் தவித்துவருகிறது.

இந்த சூழலை சாதமகாகப் பயன்படுத்திக்கொண்டு சீனா தாங்கள் தயாரித்து குவித்து வைத்துள்ள அனைத்து கருவிகளையும் ஏற்றுமதி செய்து தள்ளுகின்றது. இதில் தரமற்ற பல கருவிகளும் அடக்கம்.

'அமெரிக்கவுக்கு தேவையான பெரும்பலான முகக் கவசத்தை சீனாதான் தயாரிக்கிறது. தங்கள் மீது தடை உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபடுவதன் மூலம் இந்த பெருந்தொற்றை சமாளிக்க முடியாத நிலைக்கு அமெரிக்கா தள்ளப்படும். சீனாவுக்கு அமெரிக்கா மன்னிப்பையும், உலக நாடுகள் சீனாவுக்கு நன்றியையும் தெரிவிக்க கடன்பட்டுள்ளன' என கடந்த மார்ச் மாதம் சீனாவின் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இத்தகைய சூழலில் உலக நாடுகள் பெரும் பொருளாதார சரிவைச் சந்தித்துள்ளன. வரலாறு காணாத முடக்கத்தை சந்தித்துள்ள உலக நாடுகள் தற்போதைக்கு அத்தியாவசியப் பொருள்களின் இயக்கத்தை மட்டுமே மேற்கொண்டுவருகின்றன. ஓஇசிடி அமைப்பு நாடுகள் 25 முதல் 30 விழுக்காடு உற்பத்தி சரிவைச் சந்தித்துள்ளதாக அந்த வர்த்தக அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். சுமார் 2.2 கோடி அமெரிக்கர்கள் வேலையிழப்பைச் சந்தித்துள்ளனர்.

கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள சுமார் 157 நாடுகளில் மாணவர்களின் கல்வி தடைப்பட்டுள்ளது. கட்டுமானம், சுற்றுலா, விமான போக்குவரத்து துறைகள் முடங்கியுள்ளன. தற்போதைக்கு இது மீளும் சூழல் இல்லை.

உலக பொருளாதாரம் 3 விழுக்காடு சரிவைச் சந்திக்கும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது. 1930ஆம் ஆண்டின் உலக மந்தநிலையைக் காட்டிலும் தற்போது தீவிரமாக உள்ளதால் 9 லட்சம் கோடி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி 1.2 விழுக்காடாகவும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 1.5 விழுக்காடாகவும் கணிக்கப்பட்டுள்ளன.

இதன் பாதிப்பு மனித வாழ்க்கை முறையிலும் பெரும் மாற்றத்தை கொண்டுவருகின்றது. வணிகம், வாழ்வியல், சுகாதாரம் என அனைத்திலும் மக்கள் எதிர்பாராத மாற்றத்தை கண்டுள்ளனர். வொர்க் ஃப்ரம் ஹோம், ஹேன்ட்வாஷ் கலாசாரம், டிஜிடல் கல்வி, இ - காமர்ஸ் என பல மாற்றங்களை உலகம் கண்டுள்ளது.

அதேவேளை, 100 பில்லியன் டாலர் முதலீடுகள் உலகளவில் தேக்கம் கண்டுள்ளன. 2008ஆம் ஆண்டு உலக பொருளாதார மந்த நிலையைக் காட்டிலும் இது மும்மடங்கு அதிகம். 2.2 பில்லியன் டாலர் மதிப்பிலான உற்பத்தி நடவடிக்கையை சீனாவிலிருந்து ஜப்பான் திரும்பப் பெற்றுள்ளது.

இந்த விவகாரம் நாடுகளுக்கிடையேயான தாக்கத்தை பெரிதும் ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக உலக நாடுகளுக்கு மத்தியில் சீனாவின் மீதான நன்மதிப்பு, நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. சீன மாணவர்கள், அறிவியலாளர்கள், வணிகர்கள் தற்போது கடும் அழுத்தத்தை கண்டுள்ளனர்.

ஐநா பதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட அமைப்பு மீது உலக நாடுகள் கேள்விகளை முன்வைத்துள்ளன. ஐநா அமைப்பின் மீதான நம்பகத்தன்மை பெரிதும் சரிந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த கூற்றுக்கு இரு பெரும் காரணங்கள் உண்டு. ஒன்று, ஐநா பாதுகாப்பு அமைப்பின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களிடையேயான பிளவு. மற்றொன்று, சீனா தனது பொருளாதார வலிமையைக்கொண்டு அமைப்புகளின் மீது செலுத்தும் ஆதிக்கம்.

தற்போதைய உலக சுகாதார அமைப்பின் தலைவர் சீனாவால் முன்னிறுத்தப்பட்டவர். இது தற்போது உலக நாடுகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில் இந்தியாவின் தற்போதைய நிலை என்பதே தற்போதைய கேள்வியாகும். இதுவரை பெரும் குறைகள் இல்லாமல் இந்தியா கரோனாவை சமாளித்துவருகிறது. இந்த சிக்கலை வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும்.

மேக் இன் இந்தியாவை முன்னெடுத்து, ஜி.எஸ்.டி, தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தம் கொண்டுவந்து, இந்தியாவின் தொழில், உற்பத்தி துறைகளை தட்டி எழுப்பும் தருணம் இதுவாகும். கரோனா மூலம் ஏற்பட்டுள்ள இந்த பெரும் சவாலை வாய்ப்பாக பயன்படுத்தி இந்தியா முன்னேறும் என நம்புவோம்.

கட்டுரையாளர்: விஷ்ணு பிரகாஷ், வெளியுறுத்துறை தூதுவர்

இதையும் படிங்க: இனிமை நிறைந்த உலகம் இருக்கு கொரோனா பற்றிய கவலை எதற்கு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.