ETV Bharat / bharat

'ஆத்திரத்தில் அவ்வாறு செய்தேன்'- ஷாரூக் வாக்குமூலம் - டெல்லி வன்முறை, ஷாரூக் வாக்குமூலம், தாஹிர் உசேன், துப்பாக்கிச் சூடு, காவலர்கள், ஆயுதச் சட்டம்,போதைப்பொருள் வழக்கு

டெல்லி: டெல்லி வன்முறையின்போது காவலர்களுக்கு எதிராக ஆத்திரத்தில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகக் கைதான ஷாரூக் வாக்குமூலம் அளித்துள்ளார். இவர் மீது எவ்வித குற்றப் பின்னணியும் இல்லையென்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Mohammed Shahrukh  Shahrukh arrested  Delhi violence  Delhi riots  டெல்லி வன்முறை, ஷாரூக் வாக்குமூலம், தாஹிர் உசேன், துப்பாக்கிச் சூடு, காவலர்கள், ஆயுதச் சட்டம்,போதைப்பொருள் வழக்கு  Shahrukh said he fired in fit of rage, has no criminal background: Delhi Police
Shahrukh said he fired in fit of rage, has no criminal background: Delhi Police
author img

By

Published : Mar 4, 2020, 9:11 AM IST

டெல்லி வன்முறைப் போராட்டத்தின்போது சிவப்பு நிற டி-சர்ட் அணிந்திருந்த இளைஞர் ஒருவர், கல்லெறியும் வன்முறையாளர்களுடன் இணைந்துகொண்டு துப்பாக்கியால் சுடுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகின.

மேலும் அவர் காவலர்களை நோக்கியும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார். இவரைக் காவலர்கள் தேடிவந்தனர். இந்நிலையில் உத்தரப் பிரதேசத்தில் பதுங்கியிருந்தபோது டெல்லி குற்றப்பிரிவுக் காவலர்களால் கைதுசெய்யப்பட்டார்.

இது குறித்து காவல் கூடுதல் ஆணையர் அஜித் குமார் சிங்கலா கூறுகையில், “ஷாரூக் கையில் வைத்திருந்த துப்பாக்கியை மீட்க முயற்சிக்கிறோம். ஷாரூக் எந்த குற்றப் பின்னணியும் கொண்டவர் அல்ல. அவரின் தந்தை மீது போதைப்பொருள், போலி நாணய வழக்குகள் உள்ளன.

தற்போது அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 307 (கொலை முயற்சி), 186 (அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல்) மற்றும் ஆயுதச் சட்டப் பிரிவு 353இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரின் காவலை நீட்டிக்க முயற்சிக்கிறோம்” என்றார்.

டெல்லி வன்முறை சம்பவத்தின்போது, ஆம் ஆத்மி வார்டு உறுப்பினர் (கவுன்சிலர்) தாஹிர் உசேன் அவரது வீட்டிலிருந்துள்ளார். எனினும் அவருக்குச் சொந்தமான வீடுகள், தொழிற்சாலைகளில் ஆயுதங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையில் உளவுப் பிரிவு அலுவலர் அங்கித் சர்மா படுகொலையில், அவரது தந்தை தாஹிர் உசேன் மீது குற்றஞ்சாட்டியிருந்தார். அதில், “தாஹிர் உசேனுக்குச் சொந்தமான கட்டடத்திலிருந்து வன்முறையாளர்கள் அங்கித் சர்மாவை கற்களால் தாக்கியும், ஆயுதத்தால் குத்தியும் படுகொலைசெய்தனர்” என்றிருந்தார்.

தாஹிர் உசேன் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் ஆம் ஆத்மியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரையும் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறை முயற்சித்துவருகின்றனர். இது குறித்து காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கையில், “அவரும் விசாரிக்கப்பட வேண்டியவர்தான்” என்றனர்.

இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் மாறும் கூட்டணி கணக்கு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.