ETV Bharat / bharat

10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட கரோனா சிறப்பு மையம்: பார்வையிட்ட அமித் ஷா, கெஜ்ரிவால் - டெல்லியில் கரோனா

டெல்லி: கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்கும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்ட 10 ஆயிரம் படுக்கைகள் கொண்ட சர்தார் படேல் கரோனா சிறப்பு மையத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பார்வையிட்டனர்.

shah-kejriwal-visit-10000-bed-covid-19-facility-to-review-arrangements

author img

By

Published : Jun 27, 2020, 8:07 PM IST

இந்தியாவில் கரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், தலைநகர் டெல்லியில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை சுமார் 80 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை 2 ஆயிரத்தும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்க படுக்கைகள் பற்றாக்குறை உள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து மத்திய அரசின் உதவியால் தெற்கு டெல்லியின் சத்தார்பூரில் உள்ள சர்தார் படேல் கரோனா சிறப்பு மையத்தில் படுக்கைகள் எண்ணிக்கை 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் அறிகுறியின்றி கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என தனியாக ஒரு பிரிவு தொடங்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.

இம்மையத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இன்று பார்வையிட்டனர். இந்த மையத்தில் இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர், மருத்துவ உதவியாளர்கள் எனப் பலரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கூட்டுறவு வங்கிகள் இனி ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில்! - அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.