ETV Bharat / bharat

நாகாலாந்து பள்ளத்தாக்கில் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்கும் பணி தீவிரம்! - தேசிய பேரிடர் மீட்புப் படை

நாகாலாந்தின் இட்சூக்கோ பள்ளத்தாக்கில் பரவி வரும் காட்டுத்தீயை அணைப்பதற்காக, தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தை சேர்ந்த ஏழு குழுவினர், அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படை
தேசிய பேரிடர் மீட்புப் படை
author img

By

Published : Jan 2, 2021, 1:17 PM IST

கொகிமா: நாகாலாந்து, மணிப்பூர் எல்லையில் அமைந்துள்ள இட்சூக்கோ பள்ளத்தாக்கில் பயங்கர காட்டுத்தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் பிரபல மலையேற்றப் பகுதியில் மளமளவென பரவி வரும் காட்டுத்தீயை அணைக்கும் பொருட்டு, தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தைச் சேர்ந்த 48 வீரர்கள் அடங்கிய ஏழு மீட்புக் குழுவினர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.

அதேபோல், இந்திய விமானப் படையின் எம்ஐ-17 வி5, சி-130ஜே விமானங்கள் தீயணைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

முன்னதாக மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங்கை தொடர்பு கொண்டுப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காட்டுத்தீயை விரைவில் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என உறுதியளித்தார்.

தற்போது இந்தக் காட்டுத்தீ, மணிப்பூரின் மிக உயர்ந்த மலையான டேனிப்பூவை கடந்துள்ளதாக, அம்மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: வீட்டை இடிக்க தடைக்கோரி கங்கனா ரணாவத் தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.