ETV Bharat / bharat

தெலங்கானாவில் ஒரே நாளில் ஏழு பேருக்கு கரோனா! - கரோனா வைரஸ் அறிகுறிகள்

தெலங்கானா மாநிலத்தில் இன்று ஒரே நாளில் ஏழு பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

Seven more COVID19 cases confirmed in Telangana

author img

By

Published : Mar 18, 2020, 11:46 PM IST

சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கோவிட் -19 வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை எட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸால், சீனா, இத்தாலி, ஈரான், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

இந்தியாவிலும் கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் ஏற்கனவே ஆறு பேர் இந்த கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஒரே நாளில் ஏழு பேருக்கு கோவிட் -19 வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்த ஏழு பேரும் இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாகவும் அம்மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதன்மூலம், இந்தியாவில் கோவிட் -19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 155ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கோவிட் -19 வைரஸால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கரோனா வைரசால் விமானங்கள் ரத்து - மலேசியாவில் தவிக்கும் தமிழக மாணவர்கள்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.