ETV Bharat / bharat

ஒரே நாளில் தடுத்து நிறுத்தப்பட்ட ஏழு குழந்தைத் திருமணங்கள்: திருமண விதிகளை எடுத்துக்கூறிய அலுவலர்கள் - திருமண விதிகளை எடுத்துக்கூறிய அலுவலர்கள்

கர்நாடகா: சாமராஜ்நகர் மாவட்டத்தில் ஒரே நாளில் நடைபெறவிருந்த ஏழு குழந்தைத் திருமணங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டன.

திருமண விதிகளை எடுத்துக்கூறும் அலுவலர்கள்

author img

By

Published : Jun 15, 2020, 6:56 PM IST

Updated : Jun 15, 2020, 7:35 PM IST

கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் மாவட்டம், இண்டிகனட்டா கிராமத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று தங்களது 15 வயது சிறுமிக்கு இன்று காலை திருமணம் செய்துவைக்க இருந்த நிலையில், சிறுமியின் பெற்றோருக்கு அரசாங்கத்தின் விதிமுறைகளை எடுத்துக் கூறி பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அலுவலர்கள் திருமணத்தைத் தடுத்து நிறுத்தினர்.

அதேபோல், அரகலவாடி கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் திருமணம், ஒய்.கே.மோல் கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியின் திருமணம், அமச்சவாடி, ஷெட்டிஹள்ளி கிராமங்களில் நடைபெறவிருந்த குழந்தைத் திருமணங்கள் உள்ளிட்ட ஏழு குழந்தைத் திருமணங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அலுவலர்களால் இன்று தடுத்து நிறுத்தப்பட்டன.

இத்துறை அலுவர்கள் குழந்தைகள் உதவி எண் சேவையுடன் இணைந்து, இந்த மாதத்தில் மொத்தம் 20 குழந்தைத் திருமணங்களையும், கடந்த மே மாதத்தில் 18 குழந்தைத் திருமணங்களையும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மேலும், இம்மாவட்டத்தில் கடந்த மே மாதத்தில் மட்டும், மூன்று குழந்தைத் திருமணங்களுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இன்று குழந்தைத் திருமணங்களை நடத்தி வைக்கவிருந்த ஏழு சிறுமிகளின் பெற்றோர்கள் மீதும் புகார் அளிப்பதற்கு பதிலாக, திருமணச் சட்டம், விதிகள் குறித்து அலுலர்கள் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். இது அனைவரின் மத்தியிலும் கவனம் ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: இந்திய மாணவரை பாராட்டிய டேவிட் வார்னர்!

Last Updated : Jun 15, 2020, 7:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.