கடந்த சில மாதங்களாகவே பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளதாக பலர் குற்றம் சாட்டிவந்தனர். இதனை மீட்டெடுக்கும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கார்ப்பரேட் வரியை 30 விழுக்காட்டிலிருந்து 22 விழுக்காடாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பு பலர் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த அறிவிப்பின் எதிரொலியாக, சென்செக்ஸ் இன்று உயர்வுடன் தொடங்கியது. மும்பை பங்கு சந்தை 1075.41 புள்ளிகள் உயர்ந்து 39,090.03 வர்த்தகம் நடைபெற்றது. தேசிய பங்குச் சந்தை 329.20 புள்ளிகள் உயர்ந்து 11,603.40 வர்த்தகம் நடைபெற்றது.

கார்ப்பரேட் வரி குறைப்பு அறிவிப்பு வெளியான வெள்ளிக்கிழமையன்று, பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் மும்பை பங்கு சந்தை 1,921.15 புள்ளிகளும், தேசிய பங்கு சந்தை 569.40 புள்ளிகளும் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
