முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நேற்று உடல்நலக்குறைவுக் காரணமாக காலமானார். அவரது உடலுக்கு பல தலைவர்கள் மரியாதை செலுத்திவருகின்றனர். அந்தவகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மோதிலால் வோரா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் இன்று அவர் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
பின்னர், அவரது உடல் பாஜக தலைமையகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. தலைமையகத்தில் பாஜக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்திவருகின்றனர்.