இந்தியாவில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலர் லவ் அகர்வால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், 'நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்து 334 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 27 உயரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,116ஆக உள்ளது.
ஏப்ரல் 20 முதல் பாதிப்பற்ற பகுதிகளில் மிகுந்த கவனத்துடன் முக்கிய இயக்கங்களுக்கு அனுமதி அளிக்கப்படும். அதேவேளை பாதிப்பு தீவிரமாக உள்ள பகுதிகளான ஹாட் ஸ்பாட், ரெட் ஜோன் ஆகியவை அரசின் தீவிரக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதுவரை 2 ஆயிரத்து 231 பேர் கரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'இப்போதைக்குத் தடுப்பூசி தயாராகாது' - உலக சுகாதார அமைப்பு