ETV Bharat / bharat

விளையாட்டு துறையில் சிறந்து விளங்கிய வீரர், வீராங்கனைகளுக்கு விருது அறிவிப்பு

author img

By

Published : Aug 22, 2020, 5:31 PM IST

டெல்லி : விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் அர்ஜூனா விருது, துரோணாச்சாரியா விருது போன்ற விருதுகள் பெறுவோரின் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் விருது : ரோகித், மாரியப்பன் ஆகியோர் பெயர் இடம்பெற்றுள்ளது !

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 29ஆம் தேதியன்று, இந்தியாவில் தேசிய விளையாட்டு நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக திகழ்ந்த தயான் சந்த்தைப் பெருமைப்படுத்தும் விதமாக, அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 29ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

அந்நாளில் நாட்டின் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் ராஜிவ்காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சாரியார், தயான் சந்த் போன்ற விருதுகள் குடியரசுத் தலைவரது மாளிகையான ராஷ்டிரபதி பவனில் வழங்கப்பட்டு வருகிறது.

தேசிய விளையாட்டு நாளில் விருது பெறவுள்ளோரின் பெயர் பட்டியல்

அர்ஜூனா விருது:

இந்திய அரசு, கடந்த 1961 ஆம் ஆண்டில் அர்ஜூனா விருதுகளை வழங்கும் பணியைத் தொடங்கியது. அர்ஜூனா விருது பெற்றவருக்கு, இதுவரை ரூ .5 லட்சம் ரொக்கப் பரிசும், அர்ஜூனனின் வெண்கல சிலையும், சான்றிதழும் வழங்கப்படுகின்றது. விளையாட்டு அமைச்சகத்தின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, விளையாட்டு வீரர் முந்தைய நான்கு ஆண்டுகளாக சர்வதேச அளவில் தொடர்ந்து செயல்பட்டு வந்தால் இந்த விருதுக்கு தகுதியானவராக மாறுகிறார். அவர், விளையாட்டு வீரரின் தலைமை பண்பு, விளையாட்டுத்திறன் மற்றும் ஒழுக்க உணர்வு ஆகியவற்றை காட்டியிருக்க வேண்டும் என்பதே விதி.

துரோணாச்சார்யா விருது :

கடந்த 1985 ஆம் ஆண்டு முதல் இந்திய அரசினால் தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில், வீரர்களின் முழு விளையாட்டுத் திறனை வெளிக்கொணரும் சிறந்த விளையாட்டு பயிற்றுனர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பெற்றவருக்கு தொன்மவியலில் போர்க்கலைகளில் கற்று தேர்ந்து சிறப்பான ஆசானாக கருதப்படும் துரோணரின் வெண்கலச்சிலையோடு, இந்திய ரூபாயில் 3 லட்சம் மற்றும் பாராட்டு சான்றிதழ் கொடுக்கப்படுகிறது.

ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது :

ஒலிம்பிக் மற்றும் அனைத்து விதமான சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் நபர்களை நேரடியாக கேல் ரத்னா விருதுக்கான பரிந்துரைப்புக்குத் தகுதி பெறுகின்றனர். ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் பதக்கம் வென்றவர் தவிர, புள்ளிகளின் கணக்கீடு

உலக சாம்பியன்ஷிப் / உலகக் கோப்பைகள் (நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை) - தங்கம் (40), வெள்ளி (30), வெண்கலம் (20) வென்றவர்கள்.

ஆசிய விளையாட்டு - 30, 25, 20 புள்ளிகள், காமன்வெல்த் விளையாட்டு, உலக சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை - 25, 20, 15 புள்ளிகள்

ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த் விளையாட்டு - 15, 10, 7 புள்ளிகள் பெற்றவர்கள் இதற்கு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

இந்தாண்டு நட்சத்திர கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, மல்யுத்த வீரர் வினேஷ் போகத், மகளிர் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், டேபிள் டென்னிஸ் வீரர் மணிகா பத்ரா, ரியோ பாரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் தங்கவேலு ஆகியோருக்கு ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை தவிர பயிற்சியாளர்கள் 13 பேருக்கு துரோணாச்சார்யா விருதும், 15 பேருக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான தியான் சந்த் விருதும், அர்ஜூனா விருது 27 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பரிசு தொகை:

வழக்கத்திற்கு மாறாக, இந்தாண்டு இந்திய விளையாட்டு அமைச்சகம் தேசிய விளையாட்டு விருதுகளுக்கான பரிசுத் தொகையை பெருமளவில் உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மத்திய அரசு ஒப்புதல் அளித்தால், இதுவரை ரூ. 7 லட்சம் வழங்கப்பட்டுவந்த கேல் ரத்னா விருதை ரூ 25 லட்சமாகவும், ரூ. 5 லட்சம் அளிக்கப்பட்டுவந்த அர்ஜூனா, துரோணாச்சார்யா விருது தொகையை ரூ.15 லட்சமாகவும் உயர்த்தப்படும் வாய்ப்புள்ளது.

இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ முறையாக அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நடப்பாண்டு தேசிய விருது பெறும் வீரர்கள் காணொலி கூட்டரங்கு வாயிலாக குடியரசு தலைவரிடம் விருதைப் பெறவுள்ளனர்.

இதையும் படிங்க:தயான் சந்த் விருது பெறவுள்ள ரஞ்சித் குமாரின் பிரத்யேக பேட்டி...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.