வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் நக்சல்களின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனிடையே, அதைக் கட்டுப்படுத்தும் விதமாக பாதுகாப்பு படையினர் அதிரடி தாக்குதல் மேற்கொண்டுவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சத்தீஸ்கர் மாநிலம் கொண்டகான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் நக்சல் ஒருவர் உயிரிழந்தார்.
முன்னதாக, கொண்டகான் மாவட்டத்தில் நக்சல்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஹோன்ஹேத் கிராமத்தில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது மேற்கொள்ளப்பட்ட அதிரடி தாக்குதலில் சிக்கி நக்சல் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, மற்ற நக்சல்கள் தப்பியோடினர்.
பின்னர், நக்சல்களிடமிருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆகஸ்ட் 9ஆம் தேதி, நான்கு நக்சல்கள் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தனர். நால்வரில் இருவருக்கு சன்மானம் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: ஆற்றில் மூழ்கி உயிரிழந்த தமிழர்கள்: உடலை மீட்க திமுக கோரிக்கை