ETV Bharat / bharat

ராணுவ தேடுதல் வேட்டையில் சிக்கிய லஷ்கர் பயங்கரவாதிகள்

author img

By

Published : Jun 24, 2020, 1:21 PM IST

ஸ்ரீநகர்: சோப்பூர் பகுதியில் ராணுவம், காஷ்மீர் காவல் துறை இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் நால்வர் பிடிபட்டனர்.

Terrorist
Terrorist

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோப்பூர் பகுதியில் நேற்று (ஜூன் 23) துணை ராணுவப்படை, ஜம்மு - காஷ்மீர் காவல் துறை இணைந்து தேடுதல் வேட்டை நடத்தின.

இதில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நான்கு பேர் பிடிபட்டனர். இவர்களிடம் தற்போது தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது.

முன்னதாக, நேற்று புல்வாமா பகுதியில் நடைபெற்ற மோதலில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். துணை ராணுவப்படை வீரர் ஒருவர் படுகாயமடைந்தார்.

கடந்த சில மாதங்களாகவே காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணிகளை ராணுவம் முடுக்கியுள்ளது. கடந்த இரு நாள்களில் மட்டும் இரு வேறு ராணுவ நடவடிக்கைகளில் ஜெய்ஷ்- இ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த எட்டு பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

இதையும் படிங்க: 51 விழுக்காடு காப்பீடு சந்தை மதிப்பை இழந்த ஆயுஷ்மான் பாரத்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.