ETV Bharat / bharat

இந்தியா - சீனா இருதரப்பும் பின்வாங்கும் - நான்காம் கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு!

டெல்லி : சர்ச்சைக்குரிய கிழக்கு லடாக் கல்வான் பள்ளத்தாக்கு எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து பின்வாங்க சீனா-இந்தியா இடையேயான நான்காம் கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா - சீனா இருதரப்பும் பின்வாங்கும் : நான்காம் கட்ட பேச்சுவார்த்தையில்  முடிவு!

author img

By

Published : Jul 15, 2020, 9:55 PM IST

இந்தியா - சீனா எல்லை பகுதியான கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்திய எல்லைப் பகுதிக்குள் ஜூன் 15ஆம் தேதி இரவு பணியிலிருந்த ராணுவ அலுவலர் கர்னல் சந்தோஷ் பாபு உள்ளிட்ட இந்திய படை வீரர்களை சீன ராணுவத்தினர் காட்டுமிராண்டித்தனமாக ஆயுதங்களைக் கொண்டு தாக்கியுள்ளனர்.

இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மேலும் சில வீரர்களையும் கைது செய்து, அவர்களை மரபு சாராத வகையில், கொடூரமாகச் சித்ரவதை செய்துள்ளனர். கிழக்கு லடாக்கில் ரோந்துப் பணியிலிருந்த எண் 14ஆம் வரிசையைச் சேர்ந்த சீன ராணுவத்தினர் தான் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக அறிய முடிகிறது.

நள்ளிரவில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த இத்தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சீனத் தரப்பில் இதுவரை 43 பேர் உயிரிழந்ததாக இந்திய தரப்பில் கூறப்படுகிறது.

ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா சீனா இருநாடுகளும் மோதிக்கொண்டது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருநாடுகளும் ஆயுத ரீதியிலான எதிர்வினையை கைவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலமாக தீர்வு காண வேண்டும் சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இதனடிப்படையில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கடந்த ஜூலை 5 ஆம் தேதி, இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யின் இடையே நிகழ்ந்த தொலைபேசி உரையாடலை அடுத்து, எல்லை குறித்த இந்தியா மற்றும் சீனாவின் சிறப்பு பிரதிநிதிகள் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அந்தப் பேச்சுவார்த்தையில், இரு தரப்பினரும் அமைதிக்கான வெளிப்படையான ஒத்துழைப்பும், ஆழமான செயலும் செய்திட வேண்டும் என முடிவு செய்து வைத்திருந்தனர். இந்நிலையில், இது தொடர்பான நான்காம் கட்ட பேச்சுவார்த்தை சுசுல் எல்லையில் இருநாடுகளைச் சேர்ந்த கமாண்டர் அளவில் நேற்று காலை 11:30 மணிக்கு தொடங்கி இன்று (ஜூலை 15 ஆம் தேதி) அதிகாலை 2 மணி வரை நடைபெற்றது.

சுமார் 14.5 மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பில், இரு தரப்பினரும் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து விலக வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டதாக அறிய முடிகிறது. இருதரப்பினரும் சொந்தம் கொண்டாடும் கல்வே பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் ரோந்து புள்ளி -15 உள்ளிட்ட மிக முக்கியமான முறுகல் பகுதிகளில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என்பது இந்தக் கலந்தாய்வின் முடிவாக கருதப்படுகிறது.

ஏற்கனவே சீனா இரண்டு கிலோமீட்டர் தொலைவு வரை பின்வாங்கியுள்ளதாக, இந்திய பாதுகாப்பு உயர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. கட்டளைத் தளபதிகளின் பேச்சுவார்த்தையை அடுத்து இரு தரப்பும் பின்வாங்கியுள்ள அந்த இடங்களை இருநாடுகளும் ஆக்கிரமிக்காமல் இருக்க வேண்டும் என்றும், அவை தற்காலிகமாக ரோந்து அல்லாத மண்டலங்களாக கருதப்படும் என்றும், இந்த பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.