ETV Bharat / bharat

'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷமிட்ட மற்றொரு மாணவி கைது!

பெங்களூரு: பாகிஸ்தான் ஜிந்தாபாத் எனக் கோஷமிட்ட மாணவி அமுல்யாவிற்கு எதிராக இந்து அமைப்பினர் நடத்திய போராட்டத்தில், மற்றொரு மாணவியும் அதே முழக்கத்தை கோஷமிட்டதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார்.

second-girl-raised-pakistan-zindabad-slogan-and-got-arrested
'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' எனக் கோஷமிட்ட மற்றொரு மாணவி!
author img

By

Published : Feb 21, 2020, 2:21 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. இதனையொட்டி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சி சார்பாக நேற்று சிஏஏவிற்கு எதிராக கண்டன போராட்டம் நடைபெற்றது.

அப்போது அக்கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ஓவைசி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் அமுல்யா என்ற மாணவி பாகிஸ்தானுக்கு ஆதராவாகத் திடீரென்று 'பாகிஸ்தான் நீடூழி வாழ்க' (பாகிஸ்தான் ஜிந்தாபாத்) என்று கோஷம் எழுப்பினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. தொடர்ந்து மாணவியின் இந்தச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஓவைசி அவர் எதிரி நாட்டை புகழ்வது சரி அல்ல எனத் தெரிவித்தார். அதையடுத்து அந்த மாணவி தேச துரோக வழக்கில் கைதும் செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்று பெங்களூருவில் உள்ள டவுன்ஹால் பகுதியில் அமுல்யா கூறிய கருத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்பினர் அவர் படத்தை கிழித்து தீயிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்து அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் மற்றொரு மாணவி ஒருவர் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' எனக் கத்தி கோஷமிட்டுள்ளார். இதனால் அப்பகுதி பரபரப்பானது. மேலும் அம்மாணவி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' எனக் கோஷமிட்ட மற்றொரு மாணவி கைது

இதையும் படிங்க: மாணவி எழுப்பிய கோஷம்: சர்ச்சையை கிளப்பிய ஓவைசி கூட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.