ETV Bharat / bharat

கொரோனா எதிரொலி: பிகாரில் 144 தடை உத்தரவு

author img

By

Published : Mar 14, 2020, 3:50 PM IST

Updated : Mar 14, 2020, 5:03 PM IST

Corona
Corona

15:47 March 14

பாட்னா: கொரோனா எதிரொலியால் பிகார் மாநிலத்தின் இரண்டு மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசால் இதுவரை 83 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த இரண்டு நாள்களில் இரண்டு உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கர்நாடகாவைச் சேர்ந்த 76 வயது முதியவர் மார்ச் 12ஆம் தேதி உயிரிழந்த நிலையில், நேற்று டெல்லியைச் சேர்ந்த 69 வயது பெண் உயிரிழந்தார். இந்நிலையில், பிகார் மாநிலத்தின் பக்சர், ஷியோஹர் மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பல மாநிலங்களில் கல்வி நிலையங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ளவற்றை மார்ச் 31ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 

மார்ச் 29ஆம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே நடைபெறவிருந்த கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Last Updated : Mar 14, 2020, 5:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.