ETV Bharat / bharat

வெற்றிகரமாக மாலியிலிருந்து கொச்சி வந்த கடல் விமானம் - குஜராத் மாநிலம்

கொச்சி: மாலத்தீவில் உள்ள மாலியிலிருந்து புறப்பட்ட கடல் விமானம் கொச்சியில் உள்ள வெண்டுருதி பகுதிக்கு வெற்றிகரமாக தரையிரங்கியது.

கடல் விமான சேவை: வெற்றிகரமாக மாலியிலிருந்து கொச்சி வந்தடைந்த கடல்விமானம்

author img

By

Published : Oct 26, 2020, 9:06 AM IST

Updated : Oct 26, 2020, 9:15 AM IST

நாட்டின் முதல் கடல் விமான சேவையை பிரமதர் நரேந்திர மோடி வரும் 31ஆம் தேதி குஜராத்தில் தொடங்கிவைக்கிறார். நாட்டின் முதல் கடல் விமானம் லிபர்ட்டி சிலையிலிருந்து (Statue of Liberty) சபர்மதி வரை பறக்கவிருக்கிறது.

தனியார் விமான நிறுவனமான 'ஸ்பைஸ்ஜெட்' நாட்டில் கடல் விமான சேவையைத் தொடங்குவதற்கான அனுமதியை பெற்றுள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மாலத்தீவில் இருந்து கடல் விமானத்தை குஜராத் மாநிலம் கொண்டுவந்து தனது சேவையை தொடங்குகிறது. அதன் அடிப்படையில், " ஸ்பைஸ்ஜெட் டெக்னிக் டிவின் ஒட்டர் 300 விமானம் மாலத்தீவின் மாலி நகரிலிருந்து புறப்பட்டு, தொழில்நுட்ப நிறுத்தத்திற்காக நேற்று(அக்.25) கொச்சியில் உள்ள வெண்டுருதி சேனலுக்குள் வெற்றிகரமாக தரையிறங்கியது.

19 இருக்கைகள் கொண்ட இந்த விமானம், 12 பேர் பயணிக்கும் வசதி கொண்டது. கடல் விமானத்தின் பயணத்திற்குத் தேவையான எரிபொருள் கொச்சியில் நிரப்பட்டது. அடுத்ததாக அகமதாபாத் செல்லும் இந்த கடல் விமானம். அங்கு சபர்மதி ஆற்றங்கரை மற்றும் ஒற்றுமை சிலைக்கு இடையிலான பிராந்திய இணைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக தனது சேவையை தொடங்கயுள்ளது " என்று தெற்கு கடற்படை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவாஹாட்டி, அந்தமான்-நிக்கோபார், டெல்லி யமுனாவிலிருந்து உத்தரகண்ட் வரை டப்பர் அணை பாதையில் கடல் விமானத்தை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Last Updated : Oct 26, 2020, 9:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.