புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் ஊரடங்கில் சில தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, கடைகள் திறக்கப்பட்டன. காரைக்கால் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், மாவட்டத்தில் தகுந்த இடைவெளியை கடைபிடிக்காத வணிக நிறுவனங்களில் ஆய்வுமேற்கொண்ட நகராட்சி அலுவலர்கள் சீல் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், காரைக்கால் பகுதியிலுள்ள பாரதியார் வீதியில் நகைக்கடை ஒன்று உள்ளது. இங்கு மத்திய,மாநில அரசின் வழிகாட்டுதலின்படி தகுந்த இடைவெளியை கடைபிடிக்கவில்லை என மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்துள்ளது.
இதனையடுத்து, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா உத்தரவின்பேரில், நகராட்சி ஆணையர் சுபாஷ் தலைமையிலான நகராட்சி ஊழியர்கள், நகைக் கடையை ஆய்வுசெய்து கடைக்கு சீல் வைத்தனர்.
இதையும் படிங்க: விதிமீறிய வணிக வளாகத்திற்கு சீல் வைத்த மாநகராட்சி அலுவலர்கள்!