மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் பிப்வேவாடி பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவன் தனது வீட்டின் தரை தளத்தில் தொடர்ந்து பல மணி நேரங்களாக டிவியில் கார்ட்டூன் நிகழ்ச்சிகளை பார்த்து வந்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த அவனது தாயார் அச்சிறுவனை கண்டித்துள்ளார்.
அதேசமயம் அச்சிறுவனின் மூத்த சகோதரி டிவியை ஆஃப் செய்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அச்சிறுவன் தனது வீட்டின் முதல் தளத்திற்கு சென்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான்.
நீண்ட நேரமாக தனது சகோதரன் முதல் தளத்திலிருந்து கீழே வராததால் சந்தேகமடைந்த அவனது மூத்து சகோதரி முதல் தளத்திற்கு சென்றுள்ளார். அப்போது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்த அதிர்ச்சியில் சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தத்தை கேட்டு பெற்றோரும் அக்கம் பக்கத்தினரும் அச்சிறுவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால், அச்சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.