காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமாக கருதப்பட்ட சிந்தியா, பாஜக தேசிய தலைவர் ஜே. பி. நட்டா முன்னிலையில் நேற்று அக்கட்சியில் இணைந்தார். நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே இருந்த செய்தியாளர்கள் இதுகுறித்து ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அவர், "சிந்தியா எனது பழைய நண்பர். அரசியல் எதிர்காலத்திற்காக அவர் கொள்கையை மறந்துவிட்டார்.
பாஜகவில் அவருக்கு மரியாதை கிடைக்காது. சிந்தியா சொல்வதற்கும் உண்மைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன" என்றார். காங்கிரஸ் கட்சியில் புதிய கருத்துகள், தலைவர்கள் வரவேற்கப்படுவதில்லை என சிந்தியா விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கொரோனாவால் பொருளாதசாரம் பாதிப்படைந்துள்ளது - காங்கிரஸ்