புதிய வகை கரோனா வைரஸ் பரவலின் மத்தியில் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் பொதுமுடக்கத்தின் (Lockdown) கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான தனது மூன்றாவது திட்டத்தின் கீழ் புதிய வழிகாட்டுதல்களை உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்த புதிய வழிகாட்டுதல்கள் வருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். புதிய வழிகாட்டுதலின் கீழ், கோவிட் -19 பரவுவதை எதிர்த்து நாட்டில் விதிக்கப்பட்ட இரவு ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 1 முதல் நீக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது.
அதன்படி, சுதந்திர தின செயல்பாடுகள் தகுந்த இடைவெளி கடைப்பிடித்தலுடன் அனுமதிக்கப்படும் மற்றும் முகக்கவசங்கள் அணிவது போன்ற பிற சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றுவதும் கட்டாயம் என அரசாங்கம் தெரிவிக்கிறது.
இது தவிர, யோகா நிறுவனங்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் திறக்க அனுமதிக்கப்படும். இது தொடர்பாக நிலையான இயக்க விதிமுறைகள் சுகாதார அமைச்சகத்தால் வெளியிடப்படும்.
நாடு முழுவதும் உள்ள மக்கள், பொருள்களின் மாநிலங்கள் அல்லது மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இருக்காது. அத்தகைய இயக்கத்திற்கு கூடுதல் பாஸ் அல்லது பிற அனுமதி தேவையில்லை.
இருப்பினும், இந்தக் கட்டத்தில் ஆகஸ்ட் 31 வரை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் மூடப்படும். மேலும், மெட்ரோ சேவைகள், சினிமா அரங்குகள் மற்றும் நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபானக் கூடங்கள் (பார்), தியேட்டர்கள், ஆடிட்டோரியங்கள் மற்றும் பிற சமூகக் கூட்டங்கள் மூடப்படும்.
மேலும், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஒரு கட்டமாக சர்வதேச விமான பயணம் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கிய சேது செயலியை ஊக்குவிக்கவும் உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
புதிய வழிகாட்டுதல்களின் முக்கிய அம்சங்கள்
- இரவில் தனிநபர்களின் நடமாட்டத்திற்கான கட்டுப்பாடுகள் (இரவு ஊரடங்கு உத்தரவு) அகற்றப்பட்டுள்ளன.
- யோகா நிறுவனங்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் ஆகஸ்ட் 5, 2020 முதல் திறக்க அனுமதிக்கப்படும். இது தொடர்பாக, தகுந்த இடைவெளியை உறுதி செய்வதற்கும், கோவிட் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) நிலையான இயக்க முறைமை (SOP) வழங்கப்படும்.
- சுதந்திர தின செயல்பாடுகள் தகுந்த இடைவெளி தூரத்தோடு அனுமதிக்கப்படும் மற்றும் பிற சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். உதாரணமாக முகக்கவசங்களை அணிவது போன்றவை. இது தொடர்பாக 21.07.2020 அன்று உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படும்.
- மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் விரிவான ஆலோசனையின் பின்னர், 2020 ஆகஸ்ட் 31 வரை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூடப்படும்.
- வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பயணிகளின் சர்வதேச விமானப் பயணம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அனுமதியில்லை
மெட்ரோ ரயில், சினிமா அரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், தியேட்டர்கள், மதுபானக் கூடங்கள் (பார்), ஆடிட்டோரியங்கள், சட்டசபை அரங்குகள் மற்றும் மக்கள் கூடும் இடங்கள், கல்வி, கலாசாரம், மத வழிபாட்டு தலங்கள் மற்றும் பிற பெரிய சபைகள் ஆகியவற்றுக்கு அனுமதியில்லை. இவற்றை நிலைமை மதிப்பீட்டின் அடிப்படையில் திறப்பதற்கான தேதிகள் தனித்தனியாக பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும் பொது முடக்கம் (பூட்டுதல்) 2020 ஆகஸ்ட் 31 வரை கண்டிப்பாக கட்டுப்பாட்டு மண்டலங்களில் தொடர்ந்து செயல்படுத்தப்படும். கோவிட்-19 இன் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டு, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கட்டுப்பாட்டு மண்டலங்களை கவனமாக வரையறுக்கப்பட வேண்டும்.
-
MHA issues #Unlock3 guidelines, opens up more activities outside Containment Zones
— PIB India (@PIB_India) July 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Restrictions on movement of individuals during night (Night curfew) removed
(1/5)
Details: https://t.co/VVPbEYbJx8
">MHA issues #Unlock3 guidelines, opens up more activities outside Containment Zones
— PIB India (@PIB_India) July 29, 2020
Restrictions on movement of individuals during night (Night curfew) removed
(1/5)
Details: https://t.co/VVPbEYbJx8MHA issues #Unlock3 guidelines, opens up more activities outside Containment Zones
— PIB India (@PIB_India) July 29, 2020
Restrictions on movement of individuals during night (Night curfew) removed
(1/5)
Details: https://t.co/VVPbEYbJx8
கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள், கடுமையான கட்டுப்பாடு பராமரிக்கப்படும், அத்தியாவசிய நடவடிக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். இந்தக் கட்டுப்பாட்டு மண்டலங்கள் அந்தந்த மாவட்ட அரசு வலைத்தளங்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கத்தால் அறிவிக்கப்படும். கட்டுப்பாட்டு மண்டலங்களில் செயல்பாடுகள் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசின் அலுவலர்களால் கண்காணிக்கப்படும்.
இந்த மண்டலங்களில் கட்டுப்பாட்டு நடவடிக்கை தொடர்பான வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக செயல்படுத்தப்படும். கட்டுப்பாட்டு மண்டலங்களை முறையாக வரையறுப்பது மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்துவதை மத்திய உள்துறை அமைச்சகம் கண்காணிக்கும்.
சட்ட நடவடிக்கை
இவ்வாறு பொதுமுடக்கத்தின் மூன்றாவது தளர்வுகள் வழிகாட்டுதல் வழிமுறைகளில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இன்று மட்டும் 34 ஆயிரத்து 193 பேர் கரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 768 ஆக பதிவாகியிருந்தது. இதுவரை நாடு முழுக்க 15 லட்சத்து 31 ஆயிரத்து 669 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 5 லட்சத்து 9 ஆயிரத்து 447 பேர் சிகிச்சையில் உள்ளனர்.