Mumbai Flood Latest : மஹாராஷ்டிராவில் கடந்த சில வாரங்களாகவே கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையம், மும்பை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்றும் நாளையும் அதிதீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளதாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக மும்பை, தானே, கொங்கன் ஆகிய பகுதிகளிலுள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், உள்ளூர் வானிலையைப் பொறுத்து மற்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் மஹாராஷ்டிரா மாநிலத்தின் கல்வித் துறை அமைச்சர் ஆஷிஷ் ஷெலார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
-
In view of heavy rainfall forecasts. As a precautionary measure, holiday is declared for all schools & junior colleges in Mumbai, Thane, Konkan region for today 19 Sep 2019. District collectors in other parts of Maharashtra to decide, based on local conditions. #rain
— ashish shelar (@ShelarAshish) September 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">In view of heavy rainfall forecasts. As a precautionary measure, holiday is declared for all schools & junior colleges in Mumbai, Thane, Konkan region for today 19 Sep 2019. District collectors in other parts of Maharashtra to decide, based on local conditions. #rain
— ashish shelar (@ShelarAshish) September 18, 2019In view of heavy rainfall forecasts. As a precautionary measure, holiday is declared for all schools & junior colleges in Mumbai, Thane, Konkan region for today 19 Sep 2019. District collectors in other parts of Maharashtra to decide, based on local conditions. #rain
— ashish shelar (@ShelarAshish) September 18, 2019
நேற்றிரவு பெய்த கனமழையால் வெர்சோவா பகுதியில் மூன்று மணி நேரத்தில் 50 மி.மீ. மழை பொழிந்துள்ளது. இதனால் மஹாராஷ்டிராவின் முக்கிய பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
இதையும் படிக்கலாமே: முடங்கியது டெல்லி - புதிய மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து இன்று வேலைநிறுத்தம்!