சீனாவில் பரவி உலகையே மிரட்டிவரும் கோவிட்-19 (கொரோனா) வைரஸ், தற்போது இத்தாலி உள்பட ஐரோப்பிய நாடுகளில் தீவிரமாகப் பரவிவருகிறது. சர்வதேச அளவில் இதனால் 3000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரசை தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் கொரோனாவால் தற்போது இத்தாலி நாட்டு அரசு அங்குள்ள அனைத்து பள்ளிகள், பல்கலைக்கழகங்களுக்கு வரும் 15ஆம் தேதி வரை விடுமுறை அளித்துள்ளது.
இது குறித்து அந்நாட்டு கல்வி அமைச்சர் லூசியா அஸ்ஸோலினா கூறியதாவது, ''பள்ளி, பல்கலைக்கழகங்களை மூடுவது, ஒரு எளிய முடிவல்ல. அறிவியல்-தொழில்நுட்பக் குழுவின் கருத்துக்காக நாங்கள் காத்திருந்தோம். மாணவர்கள் விரைவில் பள்ளிக்கு வருவார்கள் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.