கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், அதனை ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டித்து விமானப் போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்தது. இதனிடையே, முக்கியத்துவம் கருதி சில நாடுகளுக்கு மட்டும் விமானங்கள் இயக்கப்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 26ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில், ஜூலை 15ஆம் தேதிவரை விமான சேவை ரத்து செய்யப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் வகையில் ’வந்தே பாரத்’ திட்டம் மூலம் மே ஆறாம் தேதி முதல் மத்திய அரசு விமானங்களை இயக்கி வருகிறது.
கரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 23ஆம் தேதி முதல் அனைத்து விதமான விமான சேவையும் ரத்து செய்யப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு பிறகு, மே 25ஆம் தேதி முதல் உள்ளூர் விமான சேவை தொடங்கப்பட்டது. இந்தியாவில் இதுவரை 6,25,544 பேர் கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 18,213 பேர் உயிரிழந்துள்ளனர்
இதையும் படிங்க: சீனாவுக்கு அழுத்தம் தரும் இந்தியா: மத்திய அமைச்சரின் திட்டம் என்ன?