ETV Bharat / bharat

நிர்பயா குற்றவாளிகளுக்கு தனித்தனியே தூக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

டெல்லி: நிர்பயா பாலியல் படுகொலை குற்றவாளிகளைத் தனித்தனியே தூக்கிலிட அனுமதிக்கக்கோரி மத்திய உள் துறை அமைச்சகம் தாக்கல்செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Supreme Court  centre's plea on Nirbhaya convicts  Delhi High Court  execute Nirbhaya convicts separately  Vinay Sharma  three-judge bench  நிர்பயா குற்றவாளிகளுக்கு தனித்தனியே தூக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை  நிர்பயா பாலியல் வழக்கு, உச்ச நீதிமன்றம், நீதிபதி பானுமதி, வழக்கு
Supreme Court centre's plea on Nirbhaya convicts Delhi High Court execute Nirbhaya convicts separately Vinay Sharma three-judge bench நிர்பயா குற்றவாளிகளுக்கு தனித்தனியே தூக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நிர்பயா பாலியல் வழக்கு, உச்ச நீதிமன்றம், நீதிபதி பானுமதி, வழக்குSupreme Court centre's plea on Nirbhaya convicts Delhi High Court execute Nirbhaya convicts separately Vinay Sharma three-judge bench நிர்பயா குற்றவாளிகளுக்கு தனித்தனியே தூக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நிர்பயா பாலியல் வழக்கு, உச்ச நீதிமன்றம், நீதிபதி பானுமதி, வழக்கு
author img

By

Published : Feb 24, 2020, 10:44 PM IST

டெல்லி 2012 பாலியல் படுகொலை வழக்கில், நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் நால்வரும் ஒருவர் பின் ஒருவராக நீதிமன்றத்தில் கடைசி நிவாரண மனுக்கள், மறுஆய்வு மனுக்களை தாக்கல் செய்துவருகின்றனர்.

மேலும் குடியரசுத் தலைவருக்கும் கருணை மனுக்களை அளித்துவருகின்றனர். இந்தக் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன. இருப்பினும் குற்றவாளிகளில் ஒருவர் இன்னமும் கடைசி சட்ட நிவாரணமான கடைசி நிவாரண மனு, கருணை மனு உள்ளிட்ட எதையும் தாக்கல்செய்யவில்லை.

மேலும் நிர்பயா வழக்கில் வெளியிலிருந்தும் சில பொதுநல மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டுள்ளன. இதனால் நால்வருக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டுவருகிறது. இந்த மனுக்கள் நிலுவையில் இருப்பதால் தண்டனையை நிறைவேற்ற முடியவில்லை.

இந்நிலையில் நால்வரையும் தனித்தனியே தூக்கிலிடக்கோரி மத்திய அரசு சார்பில் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். பானுமதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.

இந்த அமர்வில் நீதிபதிகள் அசோக் பூஷண், நவீன் சின்ஹா​ஆகியோர் உள்ளனர். டெல்லி உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்த நிலையில், மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. நிர்பயா குற்றவாளிகள் நால்வரையும் வருகிற 3ஆம் தேதி தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிர்பயா கும்பல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில் வினய் சர்மா, அக்‌ஷய் தாக்கூர், பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2012 டிசம்பர் 16ஆம் தேதி இரவு ஓடிக்கொண்டிருந்த பேருந்தில் 23 வயது துணை மருத்துவ மாணவி கொடூரமாக சிறுவன் உள்பட ஆறு பேரால் கொடூரமாகப் பாலியல் வன்புணர்வுசெய்யப்பட்டார். சில நாள்களுக்குப் பிறகு அவருக்குச் சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் இறந்துவிட்டார்.

இந்த வழக்கில் சிறுவன் அரசு கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பப்பட்டு விடுவிக்கப்பட்டார். மற்றொருவர் சிறையில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்பது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க: டெல்லி வன்முறை: 20 பேர் காயம், தலைமைக் காவலர் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.