கரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாள்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவினையடுத்து, பலதரப்பட்ட மக்கள் தங்களது வேலைகளை இழந்து, சொந்த மாநிலங்களுக்கோ, மாவட்டங்களுக்கோ செல்ல இயலாமல், உண்ண உணவின்றியும், தங்குவதற்கு உரிய இடமின்றியும் தவித்துவருகின்றனர்.
இவற்றை மாநில அரசுகள் கருத்தில்கொண்டு புலம்பெயர்ந்த கூலித்தொழிலாளர்களுக்கான அடிப்படைத் தேவைகளான உணவு, இருப்பிடம், சொந்த ஊருக்குச் செல்வதற்குத் தேவையான வசதிகளை அந்தந்த மாநில அரசுகளே பூர்த்திசெய்ய வேண்டும் என வழக்கறிஞர் அலாக் அலோக் ஸ்ரீவஸ்தா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல்செய்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை, இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டோ, நீதிபதி எல். நாகேஸ்வர ராவ் அடங்கிய அமர்வு இன்று விசாரிக்கிறது.
இதையும் படிங்க: புலம்பெயர்ந்தவர்களுக்காக மக்களிடம் கோரிக்கைவிடுக்கும் ராகுல்