ராம சேது பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ. நஸீர், சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது இந்த வழக்கை மூன்று மாதங்கள் கழித்து விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
சுப்பிரமணியன் சுவாமி தனது மனுவில், 'ராம சேது பாலம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுண்ணாம்பு சங்கிலி. இது ராவணனால் கடத்தப்பட்ட சீதையை மீட்க ராம சேதுவால் கட்டப்பட்டது' உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அளித்திருந்தார்.
இதுதொடர்பான வழக்குகள் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. கடந்த காலங்களில் இதுதொடர்பான வழக்கில், புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் மத்திய அரசிடம் கோரியிருந்தது.
இந்தப் பகுதியில் சேது சமுத்திர திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு இந்து மதக் குழுக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்து மதக் குழுக்கள் எதிர்ப்பு தெரிவிக்க புராண தொடர்பும், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க கடலுக்குள் இருக்கும் 83 கிலோ பவளப் பாறைகள் அகற்றப்படும் என்பதே காரணமாகும்.
இதையும் படிங்க: தாக்கரே அயோத்தி பயணம், காங்கிரசுக்கு சிவசேனா அழைப்பு!