டெல்லி: கரோனா பொதுமுடக்கம் (lockdown) காரணமாக வழக்குரைகள் நிதி நெருக்கடியால் தவித்துவருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு வட்டியில்லாமல் ரூ.3 லட்சம் வரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய பார் கவுன்சில் சார்பில் பொதுநல வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கரோனா பொதுமுடக்கம் காரணமாக வழக்குரைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பான தனது கவலையை வெளிப்படுத்திய தலைமை நீதிபதி, அகில இந்திய பார் கவுன்சில், மாநில பார் கவுன்சில், அனைத்து உயர் நீதிமன்ற பொது பதிவாளர் இரண்டு வாரத்துக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அளித்து உத்தரவிட்டார்.
கரோனா வைரஸ் பொதுமுடக்கம் காரணமாக, நாடு முழுக்க வழக்குரைஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சட்டத்தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்த அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
பார் கவுன்சில் தனது மனுவில், “வழக்குரைகளுக்கு கடன் வழங்க மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்றும் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தோல்வியை மறைக்க நிதிஷ் குமாரை திட்டுவதா? எதிர்க்கட்சிகளுக்கு ஜனதா தளம் கேள்வி!