ETV Bharat / bharat

கரோனா எதிரொலி: நேரில் ஆஜராகும் முறைக்கு நோ சொன்ன உச்ச நீதிமன்றம்

author img

By

Published : Jul 22, 2020, 5:35 PM IST

டெல்லி: கரோனா பெருந்தொற்று காரணமாக நேரில் ஆஜராகும் முறையை இப்போதைக்கு தவிர்க்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

கரோனா வைரஸ் நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், நேரில் ஆஜராகும் முறையை இப்போதைக்கு தவிர்க்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு பின்பற்றவது குறித்த வழக்கில் பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கில் பலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பது அவசியம், எனவே அதற்கு அனுமதி வழங்க வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தார்.

நேரில் ஆஜராகும் முறையை மீண்டும் தொடங்குவது குறித்து ஏழு நீதிபதிகள் கொண்ட குழு நான்கு வாரங்களுக்கு பிறகு முடிவெடுக்க பரிந்துரைக்கப்படுகிறது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தெரிவித்தார்.

மார்ச் மாதம் முதல், கரோனா பெருந்தொற்று காரணமாக ஆன்லைன் மூலம் உச்ச நீதிமன்றம் மனுக்களை பெற்றுவருகிறது. ஆன்லைன் சேவை குறித்த முடிவுகளை உச்ச நீதிமன்ற இ - கமிட்டி எடுத்துவருகிறது. உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளின் விசாரணை வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: குழாய் மூலம் குடிநீர்: மெகா திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.